மதுரை மேற்கு தொகுதி
1967 முதல் தற்போது வரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக இதுவரை 7 முறையும் திமுக 3 முறையும் வெற்றி பெற்று உள்ளது. அதிமுக சார்பில் 1980 ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். திமுகவின் முக்கிய மதுரை முகங்களான பொன்.முத்துராமலிங்கம் மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் இத்தொகுதியில் வென்றுள்ள செல்லூர் ராஜூ, இத்தொகுதியில் அதிக நாட்கள் எம்,எல்.ஏவாக இருக்கும் சிறப்பை பெற்று உள்ளார். திமுகவின் முக்கிய அமைச்சர் மூர்த்தி இந்தத் தொகுதியின் பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில், விஜய் இத்தொகுதியில் போட்டியிட்டால், மும்முனைப் போட்டி உருவாகும் என தவெக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், “விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்” என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

