சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாகி இருந்தன.
இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பேட்டி ஒன்றில் பில் கேட்ஸ் பேசியிருக்கிறார்.
“எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதையும், எனது அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளை அந்தச் சந்திப்புக்கு அழைத்துச் சென்றதும் நான் செய்த மிகப்பெரிய தவறு.

இது நன்கொடை அமைப்பிற்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்ஸ்டீனுடன் சேர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடவில்லை. அவருடன் சுற்றியிருந்த பெண்களுடன் நான் நேரம் செலவிடவில்லை” என்று கூறியிருக்கிறார்.

