• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எப்படியாவது இதை மட்டும் பண்ணிடுங்க.. அடுத்த 2 தலைமுறைக்கு பணம் சேர்த்துவிடலாம்! | Mutual Fund Compounding Formula: Build a ₹5 Crore Retirement Corpus Faster with 10% Annual Step-Up SIPs

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
எப்படியாவது இதை மட்டும் பண்ணிடுங்க.. அடுத்த 2 தலைமுறைக்கு பணம் சேர்த்துவிடலாம்! | Mutual Fund Compounding Formula: Build a ₹5 Crore Retirement Corpus Faster with 10% Annual Step-Up SIPs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எப்படியாவது இதை மட்டும் பண்ணிடுங்க.. அடுத்த 2 தலைமுறைக்கு பணம் சேர்த்துவிடலாம்!

ஒவ்வொரு குடும்பத் தலைவரின் கனவும் அடுத்த தலைமுறையை எப்படியாவது மேம்பட்ட பொருளாதார நிலையில் தள்ளிவிட வேண்டும் என்பது தான், குறிப்பாக மில்லினியல்களின் பெரும் கனவே எப்படியாவது இந்த மிடில் கிளாஸ் கட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தான்.

மாத சம்பளக்காரர்களுக்கு இது எட்டாக் கனியாகவே இருக்கும் நிலையில் ஒரு சில வழிகள் மூலம் ஒருவர் 5 கோடி ரூபாய் வரையில் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்பு தற்போது உள்ளது. இதற்கு நீங்க செய்ய வேண்டியது எல்லாம் தொடர்ந்து நிலையாக முதலீடு செய்ய வேண்டும்.

எப்படியாவது இதை மட்டும் பண்ணிடுங்க.. அடுத்த 2 தலைமுறைக்கு பணம் சேர்த்துவிடலாம்!

இன்றைய முதலீட்டு சந்தையில் மியூச்சுவல் பண்ட், எஸ்பிஐ முதலீடு போன்றவை எல்லோருக்கும் எளிதாக பயன்படுத்தக்கூடிய முதலீடு. பலர் மியூச்சுவல் பண்ட் ரிஸ்க் இல்லா முதலீடு என கூறினாலும் உண்மையில் இதில் ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது, பங்குச்சந்தை இயக்கத்திற்கு ஏற்பவும், நீங்கள் தேர்வு செய்தும் டைரெக்ட் மற்றும் ரெகுலர் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் முதலீட்டில் கிடைக்கும் லாபம் மாறுப்படும்.

மியூச்சவல் பண்ட் என்பது ஒரு Long Term Game. குறுகிய காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்கும் திட்டம் உடையவர்களுக்கு இது முழுமையான பலன் தராது என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். Long Term Game முறையில் முதலீடு செய்யும் போது உங்களுக்கு காம்போவுன்டிங் வட்டி வருமானம் அதிகமாக கிடைக்கும்.

5 கோடி ரூபாய் வரையிலான தொகையை உங்களுடைய அடுத்த 2 தலைமுறைக்கு உருவாக்க நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விஷயம். ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தை தாண்டி மீதமுள்ள தொகை எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். இதை கணக்கிட்டு முதலீடு செய்யும் முன், உங்கள் மற்றும் உங்களுடைய குடும்பத்திற்கு தேவையான அவசர கால நிதியை உருவாக்கிக்கொள்ளுங்கள், அதன் பின்பே முதலீடு செய்ய வேண்டும்.

சரி 5 கோடி ரூபாயை வேகமாக உருவாக்க வேண்டுமாயின் நீங்கள் ஒரு பர்மூலாவை பாலோ செய்தாக வேண்டும். மாதம் மாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதை தாண்டி. ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் ஸ்டெப் அப் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த கட்டமைப்பில் மாதம் 30000 ரூபாய் தொகையை வருடத்திற்கு 12 சதவீதம் லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் FundsIndia-வின் Wealth Conversations Report தரவுகள் படி கணக்கிட்டால் வெறும் 24 வருடத்தில் நீங்கள் நினைத்த 5 கோடி ரூபாயை உருவாக்கிட முடியும்.

இதுவே ஆண்டுதோறும் உங்களுடைய SIP தொகையை 5 சதவீதம் அதிகரித்து முதலீடு செய்தால், 5 கோடி இலக்கை அடையும் காலம் 21 ஆண்டுகள் 5 மாதங்களாக குறையும். இதுவே 10 சதவீதம் தொகையை ஸ்டெப் அப் முறையில் அதிகரித்தால் 18 ஆண்டுகள் 11 மாதங்களில் 5 கோடி ரூபாயை பெற முடியும்.

இதேவேளையில் நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்திற்கு 14-16 சதவீதம் வருடாந்திர லாபம் கிடைத்தால் 14 – 15 வருடத்தில் நீங்கள் 5 கோடி ரூபாய் அளவிலான தொகையை பெற முடியும்.

Share This Article

English summary

Mutual Fund Compounding Formula: Build a ₹5 Crore Retirement Corpus Faster with 10% Annual Step-Up SIPs

Mutual Fund Compounding Formula: Build a ₹5 Crore Retirement Corpus Faster with 10% Annual Step-Up SIPs — கஎப்படியாவது இதை மட்டும் பண்ணிடுங்க.. அடுத்த 2 தலைமுறைக்கு பணம் சேர்த்துவிடலாம்!

Story first published: Sunday, August 23, 2026, 18:57 [IST]

Other articles published on Aug 23, 2026

Read More

Previous Post

தமிழக அரசு மாதிரி பள்ளியில் வடமாநில ஆசிரியர்களா? தவெக அரசுக்கு வேல்முருகன், சீமான் கண்டனம்! | Seeman, Velmurugan Condemn TN Govt Move to Appoint North Indian Teachers for NEET Coaching

Next Post

குறைந்தபட்ச ஊதியம் RM3,100 ஆக இருக்க வேண்டும் என MTUC கோரிக்கை விடுத்துள்ளது | Makkal Osai

Next Post
குறைந்தபட்ச ஊதியம் RM3,100 ஆக இருக்க வேண்டும் என MTUC கோரிக்கை விடுத்துள்ளது | Makkal Osai

குறைந்தபட்ச ஊதியம் RM3,100 ஆக இருக்க வேண்டும் என MTUC கோரிக்கை விடுத்துள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin