Last Updated:
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சராசரியாக, இந்த வகை எபோலா தொற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு 100 பேரில் சுமார் 30 பேர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய சுகாதாரதுறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எபோலா வைரஸ் தொற்று பரவலை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சராசரியாக, இந்த வகை எபோலா தொற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு 100 பேரில் சுமார் 30 பேர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்து, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
அதன்படி, புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் எபோலா பரிசோதனைக்கான ஒருங்கிணைப்பு ஆய்வகமாக செயல்படவுள்ளது. முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தனிமைப்படுத்தல் வசதிகள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எந்தவொரு சூழலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக நியூஸ் 18க்கு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் எபோலா பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், பொதுமக்கள் பீதியடையவோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


