ஒரு ஏகபோகமான கார்ப்பரேட் வாழ்க்கை முறையில் தான் சிக்கிக்கொண்டதாகவும், அங்கு தனது அடையாளத்தை அவர் இழந்து கொண்டிருந்தார் என்றும் மேலும் படிப்படியாக ரோபோ போல மாறிக்கொண்டிருப்பதாகவும் முந்தைய ஒரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் அமெரிக்காவை விட்டு வெளியேற இது தான் காரணமாக இருந்தது என்றார் அவர்.
அனிருத்தாவின் இந்த பதிவின் கீழ் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். “அமெரிக்காவில் இருந்தாலும் அல்லது வீட்டிற்கு திரும்புவதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அது உங்கள் ஆன்மாவை மகிழ்ச்சியாக்கும் என்று நம்புகிறேன். வாழ்க்கையின் ஒரு பக்கம் அழகாக இருக்கும் இன்னொரு பக்கம் சவாலனதாக இருக்கும்” என எழுதியிருந்தார் ஒருவர்.

மற்றொரு பயனர், “தாய் நாட்டிற்கு திரும்புவது என்பது சிறந்த முடிவு. இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.” என்று கூறினார்.
“இது நீங்கள் எவ்வாறு நல்ல விதத்தில் வளர்க்கப்பட்டு இருக்கிறீர்கள் என காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில், இந்தியர்களுக்கு அமெரிக்காவுக்குச் செல்வதும் அங்கு தங்குவதும் ஒரு கௌரவ சின்னம். 70 -களின் இறுதியில் உள்ள பெற்றோர்களை, மாடி வீட்டில் பணிப்பெண்களுடன் விட்டுவிட்டு அமெரிக்காவில் வாழ்வது மதிப்புக்குரியது அல்ல… உங்களைப் போன்றவர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார் இன்னொருவர்.
அனிருத்தாவின் இந்த முடிவு பலருக்கு உணர்ச்சிபூர்வமாக உள்ளது என்பதை அறியமுடிகிறது.

