• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

என் மனைவி பற்றி நான் தப்பா பேசல.. குடும்பத்தில் பிரச்சனை! மகள் வருத்தப்படுறாங்க! பார்த்திபன் எமோஷனல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 11, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
என் மனைவி பற்றி நான் தப்பா பேசல.. குடும்பத்தில் பிரச்சனை! மகள் வருத்தப்படுறாங்க! பார்த்திபன் எமோஷனல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: நடிகர் பார்த்திபன் சமீபத்தில் தன்னுடைய டீன்ஸ் திரைப்பட பட ப்ரொமோஷனுக்காக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் இப்போது தான் பேசிய இரண்டு செய்தியை ஒன்றாக சேர்த்து போட்டதால் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில் ஒரு ட்ரெண்டிங் உருவாகி இருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியாக போகிறது என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் தொடர்ச்சியாக பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் தங்களுடைய சினிமா வாழ்க்கை குடும்ப வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பார்த்திபன் டீன்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பல சேனல்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்.

அப்போது பார்த்திபனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது. அதிலும் அதிகமான சேனல்களில் அவருடைய முன்னாள் மனைவி சீதா குறித்து கேட்க, அதற்கு பார்த்திபனும் தன்னுடைய காதல் அனுபவங்கள் மற்றும் பிரிவின் வலி குறித்து பேசியிருக்கிறார். ஏற்கனவே சீதாவும் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பிறகு எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் பழைய மகிழ்ச்சியான நினைவுகளை மட்டுமே பகிர்ந்து வருகிறார்கள்.

அதுபோலத்தான் இப்போதும் பார்த்திபன் பேட்டியில் நான் என்னுடைய காதலை உணர்ந்தது சீதாவிடம் தான். ஆரம்பத்தில் நான் மெச்சூரிட்டி இல்லாமல் எடுத்த முடிவால்தான் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. கணவனோ மனைவியோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு சுயமரியாதை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று பேட்டி ஒன்றில் வருத்தமாக பார்த்திபன் பேசியிருக்கிறார். அதற்கு காரணம் பார்த்திபன் சமீபத்தில் பேசும்போது ஒரு பேட்டியில் தன்னுடைய மனைவி குறித்து பேசி இருக்கிறார். அதுபோல இன்னொரு பேட்டியில் அவர் இயக்கிய சொர்ணமுகி படத்தை பற்றியும் பேசி இருக்கிறார். ஆனால் சேனல் ஒன்றில் இரண்டையும் ஒன்றாக்கி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த சீதா தன்னுடைய மகளிடம் வருத்தப்பட்டாராம்.

பார்த்திபனின் மகள் பார்த்திபனுக்கு மெசேஜ் செய்து என்னப்பா அம்மா பத்தி எதுவும் தப்பா பேசி இருக்கீங்களா? என்று கேட்க, இல்லம்மா நான் எதுவும் பேசல… நான் பேசுனது அவங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தா சாரி சொல்லிரு.. என்று சொல்லி நான் இரண்டு செய்தியில் பேசியதை ஒன்றாக சேர்த்து போட்டுட்டாங்க அவ்வளவுதான் என்று சொன்னேன்.

நான் எப்போதுமே மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுவேன். இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது இப்போது கூட இதுதான் எனக்கு வந்த சிக்கலாக இருக்கிறது என்று பார்த்திபன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு தன்னுடைய முன்னாள் மனைவி குறித்தும் பேசி இருக்கிறார். அதில் நான் என்னுடைய பழைய காதல் அல்லது யாரையாவது பற்றி பேசினாலே அவர்களுடைய மனது புண்படக் கூடாது என்று பார்த்து பேசுவேன்.

ஆனால் என்னில் பாதியாக இருக்கும், இப்போதும் என்னுடைய குழந்தைகளின் அம்மாவாக இருப்பவரை நான் மனசு கஷ்டப்படுத்துவேனா? ஆனால் சிலர் நாம் ஒன்று பேச என்னொன்றாக வெளியிடுவதால் மனக்கசப்புகள் குடும்பத்திற்குள் வந்து விடுகிறது என்று பார்த்திபன் வருத்தப்பட்டு இருக்கிறார்.



Read More

Previous Post

உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் ரோஹித் அணிந்த வாட்ச்… எத்தனை கோடி தெரியுமா?

Next Post

மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களும் பராமரிப்புத் தொகை கோரலாம் | Makkal Osai

Next Post
மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களும் பராமரிப்புத் தொகை கோரலாம் | Makkal Osai

மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களும் பராமரிப்புத் தொகை கோரலாம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin