Last Updated:
அதிமுக பாஜக கூட்டணியில் யார் தலைமை என்பதில் குழப்பம் நீடிப்பதாகவும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தனது தந்தைக்கு அதிமுகவில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று தவெகவில் இணைந்துள்ள முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அதிமுகவில் இருந்து எந்த நிர்வாகியும் அவரை வந்து சந்திக்கவில்லை எனக்கூறினார். இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொது செயலாளர் நிர்மல் குமார், தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் கொள்கைக்கு மாறாக அக்கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். அதிமுக பாஜக கூட்டணியில் யார் தலைமை என்பதில் குழப்பம் நீடிப்பதாகவும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
“என் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோதுகூட…” – தவெக-வில் இணைந்த பின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் பேச்சு!


