Last Updated:
என்.டி.ஏ.வில் லட்சிய ஜனநாயகக் கட்சி சேர்ந்தால் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தல் போட்டியிட முதல்வர் ரங்கசாமி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ.வில் லட்சிய ஜனநாயகக் கட்சியை சேர்த்தால் தவெகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டமாகத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காரைக்கால் சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, என்.ஆர். காங்கிரஸ் உடனான கூட்டணியை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தேசிய ஜனநாயகக் கட்சி தயாராகி வருகிறது.
அதன்படி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ள என்.ஆர்.காங்கிரஸ், சில தொகுதிகளை மாற்ற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா திடீரென சந்தித்து பேசினார். நிர்வாகிகள் இன்றி நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமரின் வருகை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, கூட்டணியில் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியை சேர்க்கக் கூடாது எனவும், மீறி சேர்த்தால் விஜயின் தவெகவுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டமாகத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தவெகவுடன் சேர்ந்து புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட முடிவெடுத்துள்ளது.
Puducherry (Pondicherry)


