• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“என் ஐபிஎல் பயிற்சிக் காலத்தில் மிகச் சிறந்த வெற்றி இதுவே” – ரிக்கி பான்டிங் பெருமிதம் | This is the best win of my IPL career – PBKS Head Coach Ricky Ponting is proud

GenevaTimes by GenevaTimes
April 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“என் ஐபிஎல் பயிற்சிக் காலத்தில் மிகச் சிறந்த வெற்றி இதுவே” – ரிக்கி பான்டிங் பெருமிதம் | This is the best win of my IPL career – PBKS Head Coach Ricky Ponting is proud
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் வணிக நலன்களின் உத்திகள் சூப்பர் ஸ்டார் வீரர்களின் வர்த்தக நலன்கள் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள், அணி உரிமையளர்களின் கணக்கீடுகளுக்குட்பட்டே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், அப்படியும் சில போட்டிகள் உண்மையான சவாலாக அமைந்து விடுவதுண்டு, நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் – கேகேஆர் போட்டி அத்தகைய தன்மை கொண்டது.

அதனால்தான் வெற்றி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், தான் ஐபிஎல் பயிற்சியாளராக இருக்கும் காலத்தில் இந்த வெற்றிதான் மிகச் சிறந்த வெற்றி என்று பாராட்டுகிறார். பொதுவாக, ஐபிஎல் பயிற்சியாளர்கள் பிக்பாஸ் போன்று எதைச் சொல்ல வேண்டும், மீடியாவிடம் எதைப் பேசவேண்டும் போன்ற சமாச்சாரங்களில் அணியின் நிர்வாகிகளின் வழிகாட்டுதலுக்குட்பட்டே செயல்படுவார்கள். அதனால் எந்தப் போட்டியைப் பற்றியும் விமர்சன ரீதியான கருத்துகளுக்கு வாய்ப்பே இல்லை.

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய கேகேஆர் அணி அதிரடி வீரர்களைக் கொண்டிருந்தாலும் மார்க்கோ யான்செனின் ஸ்விங் (3 விக்கெட்), யஜுவேந்திர செஹலின் அபாரச் சுழலுக்கு 16-வது ஓவரில் 95 ரன்களுக்கு மடிந்தனர். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் ஆகக் குறைந்த ரன் எண்ணிக்கையை வெற்றிகரமாகத் தடுத்த சாதனையை நிகழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்.

இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளின் பயிற்சியாளராக இருந்து வரும் ஆஸ்திரேலிய கிரேட் ரிக்கி பான்டிங், தன் பயிற்சிக் காலத்தின் மிகச் சிறந்த வெற்றி என்று பெருமிதம் பொங்க பேசியுள்ளார்:

“என் இருதயத் துடிப்பு எகிறியது, 200 இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இந்த 50 வயதில் இதுபோன்ற போட்டிகள் எனக்கு அதிகம் தேவையில்லை என்று கருதுகிறேன். இந்த டி20 கிரிக்கெட் எத்தனை விசித்திரங்கள் நிரம்பியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இதற்கு முதல் போட்டியில்தான் 3 நாட்களுக்கு முன் 245 ரன்களை தடுக்க முடியாமல் தோற்றோம். இங்கு 111 ரன்களை தடுத்தாட்கொண்டோம். பயிற்சியாளர்கள் நாங்கள் வீரர்களிடம் கூறினோம், சில வேளைகளில் சிறிய இலக்கை சேஸ் செய்வது கடினமாகி விடும் என்று. பிட்ச் கடினமானது, இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிட்ச் பந்துகளை நிறுத்தி வைத்து அனுப்பியது.

ஆனால் செஹல்! என்ன மாதிரியான ஸ்பெல்!! இந்த ஆட்டத்துக்கு முன் அவருக்கு ஃபிட்னெஸ் சோதனை செய்தோம். தோள்பட்டை காயம் அவரை கொஞ்சம் பாதித்தது. பயிற்சியின் போது நான் அவரிடம் கண்ணைப் பார்த்துக் கேட்டேன், ‘என்ன போட்டிக்குத் தயாரா?’ என்று. அவர் ‘கோச் நான் 100% சரியாக உள்ளேன், களமிறக்குங்கள்’ என்றார். என்ன மாதிரி வீசி விட்டார், எப்படிப்பட்ட நல்ல பவுலிங் அது!!

இடைவேளையின் போது இந்தப் போட்டியை வென்றால் அது எத்தனை இனிமையான நினைவாக இருக்கும் என்று வீரர்களிடம் கூறினேன். நான் ஐபிஎல் போட்டிகளில் நிறைய பயிற்சியாளராகப் பணியாற்றியிருக்கிறேன், ஆனால் இந்த வெற்றி என் பயிற்சிக்காலத்தின் ஆகச் சிறந்த வெற்றி” என்றார் ரிக்கி பான்டிங்.



Read More

Previous Post

வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்.. நடந்தது என்ன?

Next Post

இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது | Makkal Osai

Next Post
இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது | Makkal Osai

இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin