தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் -சிவசேனை(உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனையில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
பின்னர் கடந்த 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை(ஷிண்டே) கூட்டணி ஆட்சியைப் பிடித்து பட்னவீஸ் முதல்வராகவும் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்றனர். தற்போது இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 2022ல் மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

