மல்லை சத்யாவின் ஆவேச பேச்சு
எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா, “நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி, என்னை கட்சியிலிருந்து விலக்கி விடுங்கள். துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நான் தயார். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டு செல்வேன்,” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். மேலும், “துரை வைகோவை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவன் நான்தான்,” என்று கூறி, தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

