சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பைரவா’ படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
நடிகை அம்மு அபிராமி அதன்பிறகு பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் ‘ராட்சசன்’ படம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.
அதில் அம்மு என்ற சூப்பர் கேரக்டரில் நடித்தார். அதையடுத்து ‘துப்பாக்கி முனை’, ‘அசுரன்’, ‘தம்பி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் மாரியம்மாள் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இந்த நிலையில் தற்போது ‘கனவு மெய்ப்பட’, ‘யார் இவர்கள்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

