அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான சமையல் எரிவாயு சரக்குகள் இந்தியா வந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தேவையற்ற பீதிக்கு ஆளாகி எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம், லாக்டவுன் தற்போதைக்கு நிகழ வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், சமையல் எரிவாயு டெலிவரி செய்வதில் தாமதம், சில இடங்களில் சமையல் சிலிண்டர்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பது மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.


