• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது” – கமல்ஹாசன் கடிதம் | It hurts that what I said was misunderstood Kamal Haasan letter

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
”எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது” – கமல்ஹாசன் கடிதம் | It hurts that what I said was misunderstood Kamal Haasan letter
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் படித்தேன். கர்நாடக மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையுடன், நேர்மையுடன் நான் பின்வருவனவற்றை கூறுகின்றேன்.

புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதையும் தெரிவிப்பதுதான் நான் சொன்ன வார்த்தைகள். கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

எனது பணிக்காலம் முழுவதும், கன்னட மொழி பேசும் சமூகத்தினர் எனக்கு அளித்த அன்பையும் பாசத்தையும் நான் போற்றி வருகிறேன். இதை நான் தெளிவான மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன். இந்த மொழியின் மீதான எனது அன்பு உண்மையானது. மேலும் கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது. அனைத்து இந்திய மொழிகளின் சமமான கண்ணியத்திற்காக நான் எப்போதும் நின்று வருகிறேன், மேலும் எந்தவொரு மொழியும் மற்றொரு மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கிறேன். ஏனெனில் அத்தகைய ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

நான் சினிமாவின் மொழியை அறிவேன், பேசுகிறேன். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு உலகளாவிய மொழி. நம் அனைவரிடையேயும் அந்தப் பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காகவே எனது கருத்து இருந்தது. எனது மூத்தவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த அன்பையும் பிணைப்பையும்தான் நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த அன்பின் பிணைப்பிலிருந்துதான் சிவண்ணா இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டார். இதன் காரணமாக சிவண்ணா இவ்வளவு சங்கடத்தை சந்திக்க வேண்டியிருந்தது என்பதில் நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் ஒருவருக்கொருவர் மீதான எங்கள் உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும். இப்போது அது இன்னும் உறுதியாகிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது இந்த அறிக்கையின் நோக்கம். பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, அதனை நான் ஒருபோதும் விரும்புவதில்லை.

எனது வார்த்தைகள் அவற்றுக்கான நோக்கம் கொண்ட உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன். இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்த கிடைத்த ஒரு வாய்ப்பு இது என்றும் நான் மனதார நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

Tamilmirror Online || கொச்சிக்கடை புனித அந்தோனியார் கொடியேற்றம்…

Next Post

தனியார் டி20 லீகுகள் காவு வாங்கிய இன்னொரு வீரர் ஹென்ரிச் கிளாசன்! | Heinrich Klaasen another player who prefers franchise T20 cricket leagues

Next Post
தனியார் டி20 லீகுகள் காவு வாங்கிய இன்னொரு வீரர் ஹென்ரிச் கிளாசன்! | Heinrich Klaasen another player who prefers franchise T20 cricket leagues

தனியார் டி20 லீகுகள் காவு வாங்கிய இன்னொரு வீரர் ஹென்ரிச் கிளாசன்! | Heinrich Klaasen another player who prefers franchise T20 cricket leagues

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin