2047-ல் வளர்ந்த இந்தியாவுக்கான தனது பார்வை இன்றைய முதல் முறை வாக்காளர்களுடன் பிணைந்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகள் அவர்களின் நம்பிக்கையை அழித்துவிட்டதாக மோடி விமர்சித்துள்ளார்.
‘நான் பேசும் வளர்ந்த இந்தியா, இன்று 20 வயதைக் கடந்தவர்கள். இது ஒரு வகையில் அவர்களது முழு வாழ்க்கையின் காலகட்டம். 2047-ல் அவர்களுக்கு வயது 40 முதல் 45 ஆகும். அதாவது இந்தியாவின் வளர்ச்சியின் செயல்முறையும் மற்றும் அவர்களது வாழ்க்கை செயல்முறையும் இரண்டும் ஒன்றுதான். அவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. 2047-ன் மிகப்பெரிய பயனாளியாக அவர்கள்தான் இருக்கப் போகிறார்கள்’ என்று பிரதமர் மோடி கூறினார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த பிரதமர், அக்கட்சியின் அறிக்கையானது பொருளாதாரத்தை முற்றிலுமாக தோல்வியடையச் செய்துள்ளது என்று விமர்சித்தார். ‘எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கை, நாட்டின் முதல்முறை வாக்களிப்பவர்களின் விருப்பத்தையே அழிக்கிறது. நீங்கள் ஒரு முழுமையான பகுப்பாய்வு செய்தால், மிகப்பெரிய இழப்பு 25 வயதுக்கு குறைவானவர்களுடையதுதான். இந்த அறிக்கை அவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும். அவர்களின் வாழ்க்கையை சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன். நாட்டில் புதுமைக்கு வலு சேர்க்க விரும்புகிறேன்’ என்று மோடி கூறினார்.
‘இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். இன்று, எனது நாட்டின் இளைஞர்களுக்கு டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த பலம் கொடுத்துள்ளேன். இந்தியாவில் அவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன’ என்று பிரதமர் மேலும் கூறினார்.
Also Read |
‘இந்தியா பயனடையும்’- ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய பிரதமர் மோடி!
முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தனது கட்சியின் உறுதிமொழி என்று கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கையைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழு சாதகமான மற்றும் புதுமையான பரிந்துரைகளைப் பெற்றதாக அவர் கூறினார்.
ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் மோடி, நாட்டில் நல்ல நிர்வாகம், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் தரவு நிர்வாகத்தை வலுப்படுத்த தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை தனது அரசு உருவாக்கும் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
