Last Updated:
Sajeeb Wazed Joy, ஷேக் ஹசீனாவை இந்திய அரசு பாதுகாக்கும் என நம்புகிறார்; வங்கதேச அரசியல், நீதிபதி நீக்கம், Mohamed Yunus, Lashkar-e-Taiba தொடர்பு குற்றச்சாட்டு.
தனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும் என நம்புவதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் (Sajeeb Wazed Joy) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தனது தாய் ஷேக் ஹசீனா மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், வழக்கு விசாரணைக்கு முன் 17 நீதிபதிகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் வங்கதேச அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும், ஷேக் ஹசீனாவை இந்திய அரசு பாதுகாக்கவில்லை என்றால் கிளர்ச்சியாளர்கள் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.
வங்கதேச போராட்டத்திற்கு முந்தைய அமெரிக்க அதிபர் பைடன் அரசு பண உதவி செய்ததாகவும், ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை தற்போதைய முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு விடுவித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், வங்கதேசத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு சர்வசாதாரணமாக செயல்படுவதாகவும், அண்மையில் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் எனவும் சஜீத் வசீத் கூறியுள்ளார்.
November 19, 2025 3:29 PM IST
“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்..” ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை!


