Last Updated:
ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
தனக்கு யாருமே உதவி செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான் வேதனை தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாள் காலையிலும் விழிக்கும்போது, தான் ஏன் மீண்டும் மீண்டும் கடினமாக உழைக்க வேண்டும்? அதே சூழலை ஏன் மீண்டும் சந்திக்க வேண்டும்?’ என்று தனக்கு தானே கேள்வி எழுப்பிக் கொள்வதாகவும், ஆனால், தனது தந்தையின் கடின உழைப்பை பார்த்தால் அவருக்காக ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.
தன் வாழ்க்கையில் தனக்கு யாருடைய ஆதரவும் இல்லை என்பது எல்லாருக்குமே தெரியும் என வேதனை தெரிவித்த சர்ஃபராஸ் கான், யாராவது ஆதரவாக இருந்தார்கள் என்றால், அது தன் தந்தை மட்டும்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியில் தனக்கு எளிதாக இடம் கிடைக்கவில்லை என்றும், முதல்தர போட்டிகளில் 200, 250, 300 எனப் பெரிய ரன்களைக் குவித்து, கடுமையான உழைப்பிற்குப் பிறகே இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அணிக்காக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 3 அரை சதம் அடித்தப்போதிலும், அடுத்தடுத்த தொடர்களில் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.


