Last Updated:
பயணிகள் விமானம், சரக்கு விமானம், ராணுவ விமானம் உள்ளிட்ட விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
விமானிகள் எந்த வயதில் ஓய்வு பெறுவார்கள் என்பது குறித்தும், ராணுவம் மற்றும் கமர்ஷியல் விமானங்களுக்கான விதிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
விமானத்தில் பணியாற்றுவது என்பது பலருக்கும் ஒரு கனவு வேலையாக இருந்து வருகிறது. உலகில் மிகவும் கஷ்டமான வேலைகள் இன்று 10 பணிகளை எடுத்துக் கொண்டால், அவற்றில் ஒன்றாக இந்த விமானத்தில் பணியாற்றும் வேலைகள் இடம்பெறக்கூடும்.
ஏனென்றால், ஒரு சிறு விபத்து ஏற்பட்டாலும் கூட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். பெரும்பாலானோர் அனைத்து விதமான விமானங்களுக்கும் ஒரே மாதிரியான பைலட் தான் இருப்பார்கள் என்று எண்ணுவது உண்டு. மேலும் அவர்கள் ஒரே மாதிரியான விமானங்கள் இருப்பதாகக் கருதுகின்றனர்.
ஆனால், பயணிகள் விமானம், சரக்கு விமானம், ராணுவ விமானம் உள்ளிட்ட விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த அளவில், விமானிகளுக்கு ஒரு சில பயிற்சி பள்ளிகள் மட்டுமே உள்ளன. இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி, ராஜீவ் காந்தி அகாடமி, பாம்பே பிளையிங் கிளப், நேஷனல் ஃபிளையிங் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட், மத்திய பிரதேஷ் ஃப்ளையிங் கிளப் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
முன்பு ஏர் இந்தியா உள்பட அனைத்து பயணிகள் விமானங்களிலும் விமானிகளுக்கான ஓய்வு வரும் வயது வரம்பு 58 ஆக இருந்தது. இதனை தற்போது 65 ஆக உயர்த்தியுள்ளனர்.
இந்திய போர் விமானங்களில் பல்வேறு வகை ரேங்கின் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வுறும் வயது தீர்மானிக்கப்படும். அதிகபட்சமாக 60 வயது வரை ராணுவ விமானங்களில் பணியாற்றலாம். கமர்ஷியல் விமானங்களில் பயணிகளுக்கான விமானிகளுக்கான வயது உச்சவரம்பு 67 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
June 15, 2025 10:51 PM IST
எந்த வயதில் விமானிகள் ஓய்வு பெறுவார்கள் தெரியுமா? ராணுவ மற்றும் கமர்ஷியல் விமானங்களுக்கான விதிகள் என்ன?


