10 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் உதவியுடன் சேமிப்பு அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கைத் திறக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குழந்தைகள் பணத்தை எவ்வாறு சேமிப்பது மற்றும் நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள உதவும் என்று மத்திய வங்கி கூறுகிறது.
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம். இருப்பினும், இதில் இரண்டு வயதுப் பிரிவுகள் உள்ளன, அவை
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இந்த வங்கிக் கணக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலருடன் கூட்டாக இயக்கப்பட வேண்டும்.
10 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: 10 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வங்கிக் கணக்கைத் திறக்கலாம். இருப்பினும், இந்த வங்கிக் கணக்கைத் திறக்க அவர்கள் பெற்றோரின் உதவியைப் பெற வேண்டும்.
1. ஜாயிண்ட் அக்கௌன்ட் (பாதுகாவலருடன்):
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை பாதுகாவலர் வங்கி கணக்கை மேனேஜ் செய்யலாம்.
2. குழந்தைகளுக்கான இன்டிபென்டென்ட் அக்கௌன்ட்:
10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு
சுயமாக வங்கி கணக்கை ஆக்சஸ் செய்யலாம் (பணம் எடுப்பது, ஏடிஎம் பயன்பாடு)
பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் (வயதுச் சான்றாக)
ஆதார் கார்டு
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
பெற்றோர்/பாதுகாவலருக்கு:
ஆதார் கார்டு /பான் கார்டு (ஐடி மற்றும் முகவரிச் சான்று)
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
ரிலேஷன்ஷிப்க்கான ப்ரூப் (ஆவணங்களில் விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றால்)
1. வங்கிக் கிளையைப் பார்வையிடவும் (ஆஃப்லைன் முறை):
உங்களுக்கு அருகிலுள்ள வங்கியின் கிளைக்குச் செல்லவும்.
குழந்தைகள் வங்கி கணக்கை திறப்பதற்க்கான ஃபார்ம்-ஐ பூர்த்தி செய்யவும்.
தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பிக்கவும்.
தேவையான அம்சங்களைத் தேர்வு செய்யவும் (ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங் போன்றவை)
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரின் கையொப்பங்களும் இருக்க வேண்டும்
இந்த வங்கி கணக்கு 2 முதல் 5 வேலை நாட்களில் ஆக்ட்டிவேட் செய்யப்படும்.
2. ஆன்லைன் முறை:
வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
‘ஓபன் மைனர் அக்கௌன்ட்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
ஃபார்ம்-ஐ பூர்த்தி செய்து ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை டவுன்லோட் செய்யவும்
KYC வெரிஃபிகேஷனுக்காக வங்கி கிளைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.
குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கைத் திறப்பதற்க்கான நன்மைகள்:
சிறு வயதிலிருந்தே சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறது
பேசிக் மனி மேனேஜ்மென்ட்டை அறிமுகப்படுத்துகிறது
டிஜிட்டல் வங்கியைப் பற்றி புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது
தேவைகளுக்கு அடிப்படையிலான சேமிப்பை ஊக்குவிக்கிறது (பொம்மைகள், புத்தகங்கள், பொழுதுபோக்குகள்)
தங்கள் சேமிப்பில் வட்டி சம்பாதிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது
பணம் எடுப்பது, ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைக்கான விதிகள்:
ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்புகள்: ஒரு நாளைக்கு ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை பணம் எடுக்கலாம்
இன்டர்நெட் பேங்கிங்: பெரும்பாலும் பார்க்க மட்டுமே அல்லது லிமிடெட் ட்ரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கப்படுகிறது
செக் புக்குகள் இல்லை (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு)
சில பரிவர்த்தனைகளுக்கு பாதுகாவலரின் ஒப்புதல் தேவை
பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே டெபிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு 18 வயதை எட்டும்போது என்ன நடக்கும்?
வங்கி கணக்கை வழக்கமான சேவிங் அக்கௌன்ட் ஆக மாற்ற வேண்டும். 18 வயது பூர்த்தியான நபரின் KYC ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் வங்கி கணக்கில் பாதுகாவலரின் ஆதாரிட்டி முடிவடைகிறது என்பதால் சில வங்கிகளில் புதிய அக்கௌன்ட் நம்பர் வழங்கப்படலாம்.
July 24, 2025 4:40 PM IST

