• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எந்த அடிப்படையில் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது? துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேள்வி

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
எந்த அடிப்படையில் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது? துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 17, 2025 5:52 PM IST

ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா என கேள்வி எழுப்பி, நீதிமன்றத்தின் அதிகாரத்தை சாடியுள்ளார்.

News18News18
News18

எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மசோதாக்கள் குறித்து அதிகபட்சம் 3 மாதங்களில் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும், அரசியலைமைப்பில் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரிவு 142ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் உச்ச நீதிமன்றம் பயன்படுத்துவதாக ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். அரசியலமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 145வது பிரிவை எடுத்துரைப்புதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை என்றும் குறிப்பிடுள்ளார்.

அரசியலமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா என்றும் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பி உள்ளார். சட்டம் இயற்றுவது நிர்வாகப் பணிகளை செய்வது போன்ற நாடாளுமன்ற பணிகளை நீதிபதிகள் செய்வதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

First Published :

April 17, 2025 5:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

எந்த அடிப்படையில் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது? துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேள்வி

Read More

Previous Post

Tamilmirror Online || பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

Next Post

டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருக்கு அபராதம் | IPL 2025: Delhi Capitals bowling coach Munaf Patel fined

Next Post
டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருக்கு அபராதம் | IPL 2025: Delhi Capitals bowling coach Munaf Patel fined

டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருக்கு அபராதம் | IPL 2025: Delhi Capitals bowling coach Munaf Patel fined

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin