• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன்’ – மனம் திறக்கிறார் பும்ரா | I not afraid to bowl to any batsman says Bumrah ipl 2025

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன்’ – மனம் திறக்கிறார் பும்ரா | I not afraid to bowl to any batsman says Bumrah ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: எந்​தவொரு பேட்​ஸ்​மேனுக்​கும் பந்​து​வீசுவதற்கு பயப்பட மாட்​டேன் என்று மும்பை இந்​தி​யன்ஸ் அணி வீரர் ஜஸ்​பிரீத் பும்ரா கூறி​யுள்​ளார்.

உலகில் தற்​போதுள்ள வேகப்​பந்து வீச்​சாளர்​களில் மிக​வும் அபாயகர​மான பந்​து​வீச்​சாள​ராக கருதப்​படு​பவர் ஜஸ்​பிரீத் பும்​ரா. டி20 போட்​டிகளின் கடைசி ஓவர்​களில் மிகச்​சிறந்த முறை​யில் பந்​து​வீசி எந்​தவொரு பேட்​ஸ்மேனை​யும் திணறடிக்​கும் அசாத்​திய திறமை பெற்​றவர் பும்​ரா. கடந்த ஆண்டு ஏற்​பட்ட காயம் காரண​மாக பும்ரா சில மாதங்​கள் ஓய்​வில் இருந்​தார். இதைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரின் பாதி​யில்​தான் மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​காக களமிறங்​கி​னார் பும்​ரா. இது​வரை 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 11 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளார் அவர்.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற ஜஸ்​பிரீத் பும்ரா கூறிய​தாவது: ஒவ்​வொரு ஆட்​டத்​தை​யும் புதி​தாக விளை​யாடு​வது போன்​று​தான் நான் அணுகு​வேன். இது​வரை எந்​தவொரு பேட்​ஸ்​மேனை​யும் கண்டு பயந்​த​தில்​லை. அவர் மிகச்​சிறந்த பேட்​ஸ்​மே​னாகவோ அல்​லது சராசரி​யான மட்டை வீச்​சாள​ராகவோ இருக்​கலாம். உண்​மை​யில் எந்த வீரரை​யும் கண்டு பயந்​த​தில்லை என்​பது​தான் உண்​மை. கிரிக்​கெட் விளை​யாட்டை நான் மிக​வும் மதிக்​கிறேன். அதே​போல் விளை​யாட்​டில் பங்​கேற்​கும் ஒவ்​வொரு வீரருக்​கும் நான் மதிப்பு கொடுக்​கிறேன்.

ஆனால், நான் அவரைப் பார்த்து பயப்​படு​கிறேன் என்​றோ, அவர் என்னை விட சிறந்​தவர் என்றோ அந்த பேட்​ஸ்​மேனுக்கு மன உறு​தி​யைக் கொடுத்​து​விட்​டால், விளை​யாட்​டில் நான் தோல்வி கண்​டு​விட்​டேன் என்று அர்த்​தம். எனவே, மன உறு​தியை விட்​டுத்​தர​மாட்​டேன்.

போட்​டி​யின்​போது எனக்கு அது மோச​மான நாளாக இருந்​தா​லும் சரி.. ஒரு​வேளை என்​னுடைய பந்​து​வீச்​சில் பேட்​ஸ்​மேன்​கள் ரன்​கள் குவித்​திருந்​தா​லும் சரி. அதுகுறித்து நான் கவலை கொள்​ள​மாட்​டேன். என்னை யாரும் வெல்ல முடி​யாது என்று மனதள​வில் என்னை திடப்​படுத்​திக் கொள்​வேன். இதைத்​தான் இது​நாள் வரை கிரிக்​கெட்​டிலிருந்து நான் கற்​றுக்​கொண்​டேன். அதன்​படி நடந்து வரு​கிறேன்.

கிரிக்​கெட்​டில் ஒவ்​வொரு நாளும் அது உங்​கள் நாளாக அமையப்​போவ​தில்​லை. அனைத்​தை​யும் நீங்​கள் கட்​டுப்​படுத்த முடி​யாது. ஆனால், உங்​களு​டைய வேலையை நீங்​கள் சரி​யாகச் செய்​ய​வேண்​டும். உங்​களை முழு​தாக நம்ப வேண்​டும். அப்​போதுதான் உங்​களால் சிறந்த செயல்​திறனை விளை​யாட்​டில் தர முடி​யும்.

நடப்பு சீசனில் எங்​கள் மும்பை அணி மிகச்​சிறந்த செயல்​திறனை வெளிப்​படுத்தி வரு​கிறது. ஓர் அணி​யாக நாங்​கள் மெது​வாக வெற்​றிகளைப் பெற ஆரம்​பித்​தோம். சரி​யான நேரத்​தில் உச்​சத்​துக்கு வந்​து​விட்​டோம். எங்​கள் அணி தனி நபரை மட்​டும் நம்​பி​யிருக்​காமல் வெற்​றிகளைக் குவித்து வரு​வது நல்ல அறிகுறி​யாகத்​ தென்​படு​கிறது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.



Read More

Previous Post

ராமர் பற்றிய ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் | bjp condemns for rahul comment on ramar

Next Post

“கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல்” – நெதன்யாகு எச்சரிக்கை!

Next Post
“கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல்” – நெதன்யாகு எச்சரிக்கை!

“கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல்” - நெதன்யாகு எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin