
Last Updated:
வேலை மற்றும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை சமமாக பார்ப்பவர்களால் தான் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்க முடியும் என ஆனந்த் மகிந்திரா கருத்து.
எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி வேலை செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என L&T தலைவர் சுப்ரமணியனுக்கு மகிந்திரா நிறுவன தலைமை செயல் இயக்குநர் ஆனந்த் மகிந்திரா பதிலடி கொடுத்துள்ளார்.
வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மனைவியின் முகத்தை எவ்வளவு மணி நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பிர்கள் எனவும் L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் பேசியிருந்தார்.
இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆனந்த் மகிந்திராவிடம், நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிக்க: “90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” – பிரபல தொழிலதிபர் சர்ச்சை பேச்சு
அதற்கு பதில் அளித்த ஆனந்த் மகிந்திரா, “ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமில்லை” என்றும், எப்படி வேலை செய்கிறோம் என்பதே முக்கியம் எனக்கூறினார்.
மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தை செலவிடாமலும், வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கவனிக்க நேரமில்லாமலும் இருந்தால் எப்படி சரியான முடிவுகளை எடுக்க முடியும் எனவும் ஆனந்த் மகிந்திரா கேள்வி எழுப்பினார்.
வேலை மற்றும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை சமமாக பார்ப்பவர்களால்தான் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து தனது மனைவி அற்புதமானவர் என்றும் அவரை பார்க்க தாம் பெரிதும் விரும்புவதாகவும் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார்.
January 12, 2025 8:52 AM IST
“எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமில்லை..” – சுப்ரமணியன் கருத்துக்கு ஆனந்த் மகிந்திரா பதிலடி

