• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எத்தனால் பஞ்சாயத்தே இன்னும் முடியல.. புதுசா ஐசோபியூட்டனால் வர போகுதாம்.. வாகன ஓட்டிகளே கவனம்..! | India’s Next Fuel Shift: After E20, Government Eyes Up to 15% Isobutanol Blend in Diesel

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
எத்தனால் பஞ்சாயத்தே இன்னும் முடியல.. புதுசா ஐசோபியூட்டனால் வர போகுதாம்.. வாகன ஓட்டிகளே கவனம்..! | India’s Next Fuel Shift: After E20, Government Eyes Up to 15% Isobutanol Blend in Diesel
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எத்தனால் பஞ்சாயத்தே இன்னும் முடியல.. புதுசா ஐசோபியூட்டனால் வர போகுதாம்.. வாகன ஓட்டிகளே கவனம்..!

உலகிலேயே அதிக பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் ஒரு நாடு இந்தியா. இங்கே ஒரு வீட்டுக்கு ஒரு பைக் அல்லது கார் கண்டிப்பாக இருக்கிறது. அதுவும் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் வசிக்கும் வீடுகளில் ஒரு குடும்பத்திற்கு கண்டிப்பாக ஒரு கார், ஒரு பைக் இருப்பதை காண முடிகிறது. இத்தனை வாகனங்களுக்கும் தேவையான பெட்ரோல், டீசலை தயாரிக்க பல லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஒவ்வொரு நாளும் இந்தியாவுக்கு தேவை.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவிலான போர் பதற்றம், வணிக மோதல்கள், பொருளாதார தடைகளுடன் இணைந்தது என்பதால் உலகளவில் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிடும். அண்மையில் நடந்த ஈரான் போரே அதற்கு சாட்சி. ஒட்டுமொத்தமாக நாம் கச்சா எண்ணெய்க்கு வெளிநாடுகளை சார்திருப்பதே இதற்கு காரணம். இந்நிலையில் தான் அரசு எத்தனால் எனப்படும் உயிரி எரிபொருள் பயன்பாட்டை முன் நிறுத்துகிறது.

எத்தனால் பஞ்சாயத்தே இன்னும் முடியல.. புதுசா ஐசோபியூட்டனால் வர போகுதாம்.. வாகன ஓட்டிகளே கவனம்..!

இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும், பசுமை எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது E20 எனப்படும் 20% எத்தனால், 80% பெட்ரோல் என்ற வகையில் தான் பெட்ரோலே விற்கப்படுகிறது. இந்த பஞ்சாயத்தே இன்னும் முடியாத நிலையில் பெட்ரோலை தொடர்ந்து டீசலிலும் புதிய எரிபொருள் கலப்பை மேற்கொள்ள அரசு பரிசீலனை செய்து வருகிறது.

டீசலில் 15 சதவீத ஐசோபியூட்டனால் (Isobutanol) கலக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் எரிபொருள் தேவையில் டீசலின் பங்கு மிக முக்கியமானது. சரக்கு வாகனங்கள், பேருந்துகள், விவசாய இயந்திரங்கள் என பெரும்பாலானவை டீசலையே நம்பியுள்ளன. இந்நிலையில் தான் எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது. அதனால், எத்தனாலை ஐசோபியூட்டனாலாக மாற்றி, அதை டீசலுடன் கலக்கத் திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ஐசோபியூட்டனாலை எரிபொருளாக கொண்டு அரசு ஏற்கனவே சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, சில ஜெனரேட்டர்களை 100% எத்தனால் மற்றும் ஐசோபியூட்டனால் மூலம் இயக்கி பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. இது டீசல் வாகனங்களிலும் இந்த எரிபொருளை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எத்தனாலை விட ஐசோபியூட்டனாலுக்கு எரிசக்தி அடர்த்தி அதிகம், எனவே வாகனங்களின் செயல்திறன் பெரிய அளவில் பாதிக்கப்படாது , டீசல் இயந்திரங்களுக்கு இது மிகவும் ஏற்றது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை டீசலுடன் நிலையான முறையில் கலந்து பயன்படுத்தலாம், இதனால் தற்போதைய வாகனங்களின் இயந்திரங்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை என சொல்லப்படுகிறது.இந்தியாவில் பெட்ரோல் பயன்பாட்டை விட டீசல் பயன்பாடு அதிகம். எனவே, இந்த 15 சதவீத ஐசோபியூட்டனால் கலப்புத் திட்டம் அமலுக்கு வந்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான அந்நிய செலாவணி மிச்சமாகும்.

முன்னதாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் வாகனங்களில் என்ஜின்கள் சேதமடைகிறது, இன்சூரன்ஸ் கிடைப்பதில்லை, பெட்ரோலில் எறும்பு ஏறுகிறது என்றெல்லாம் வீடியோக்கள் , பதிவுகள் வெளியான சூழலில் மத்திய அரசு இவை அனைத்துமே போலியான தகவல் என 10 அம்ச விளக்கத்தை வெளியிட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே எத்தனால் பெட்ரோல் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாகவும் பல கட்ட சோதனைகள் மற்றும ஆய்வுகளுக்கு பின்னரே இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது என்றும் அரசு

Share This Article

English summary

India’s Next Fuel Shift: After E20, Government Eyes Up to 15% Isobutanol Blend in Diesel

எத்தனால் பஞ்சாயத்தே இன்னும் முடியல.. புதுசா ஐசோபியூட்டனால் வர போகுதாம்..!! வாகன ஓட்டிகளே எச்சரிக்கை..!- Union minister Nitin Gadkari announced plans to permit blending of up to 15% isobutanol in diesel as India advances its biofuel push to cut emissions and reduce oil imports.

Story first published: Monday, July 6, 2026, 13:09 [IST]

Other articles published on Jul 6, 2026

Read More

Previous Post

பியூட்டி பார்லர் பெண்ணிடமிருந்து வந்த போன்! ஆசையாக ஓடிய காரைக்குடி பைனான்சியர்.. என்ன நடந்தது தெரியுமா | What Happened When a Karaikudi Financier Went to Meet a Beauty Parlour Woman?

Next Post

உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Next Post
உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin