பணத்தை சேமிப்பது என்பது நமது பொருளாதார நலனுக்கும் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைத்துக் கொள்வதற்கும் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படுகிறது. எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிப்பது முதல் நமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது வரை பல வகையில் சேமிப்பு நமக்கு உதவக்கூடும். நமக்கு உதவும் வகையில் ஃபிக்சட் டெபாசிட்கள் ரெக்கரிங் டெபாசிட்கள் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
ஃபிக்சட் டெபாசிட்கள் நிலையான மற்றும் பாதுகாப்பான வழியில் நிலையான வட்டி விகிதங்களில் உங்களுடைய சேமிப்புகளை அதிகரிக்க செய்கிறது. மேலும் இதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன் எவ்வளவு என்பதை உங்களால் கணிக்க முடியும். அதே நேரத்தில் ரெக்கரிங் டெபாசிட்களில் வழக்கமான பங்களிப்புகள் மூலமாக உங்களுடைய எதிர்கால தேவைகள் அல்லது இலக்குகளை நீங்கள் அடையலாம்.
உங்களுடைய பொருளாதார இலக்குகள், அபாயங்களை எந்த அளவுக்கு நீங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறீர்கள் மற்றும் பண தேவைகளின் அடிப்படையில் FD மற்றும் RD இடையே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஃபிக்சட் டெபாசிட் (FD):
பெரிய அளவிலான முதலீடு:
ஃபிக்சட் டெபாசிட்டில் நீங்கள் ஒரே முறை பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்வீர்கள்.
நிலையான வட்டி விகிதம்:
ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் நீங்கள் முதலீடு செய்யும் சமயத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு அந்த கால அளவு முழுவதும் அதே வட்டி விகிதம் நீடிக்கிறது.
தேர்வு செய்து கொள்ளும் வகையில் கால அளவு:
ஒரு சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை உங்களுக்கு விருப்பமான கால அளவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
வட்டியை வித்ட்ரா செய்யும் ஆப்ஷன்கள்:
வட்டிக்கு வட்டி என்ற முறையிலோ, உங்கள் வட்டியை மீண்டும் முதலீடு செய்தோ அல்லது வழக்கமான இடைவெளியில் அவற்றை வித்ட்ரா செய்து கொள்வது உங்களுடைய விருப்பம்.
மெச்சூரிட்டிக்கு முன்பு ஃபிக்சட் டெபாசிட் கணக்கை மூடுவதால் வட்டி இழப்பு மற்றும் அபராதங்கள் உங்களுக்கு விதிக்கப்படலாம்.
ரெக்கரிங் டெபாசிட் (RD):
வழக்கமான சேமிப்பு:
ரெக்கரிங் டெபாசிட் மூலமாக வழக்கமான இடைவெளியில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமிக்கலாம்.
விருப்பமான டெபாசிட் தொகை:
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
நிலையான வட்டி விகிதம்:
ஃபிக்சட் டெபாசிட்களைப் போலவே ரெக்கரிங் டெபாசிட்களிலும் நிலையான வட்டி விகிதம் RD கால அளவு முழுவதும் வழங்கப்படுகிறது.
நிலையான கால அளவு:
ரெக்கரிங் டெபாசிட்டில் நிலையான கால அளவு மற்றும் மெச்சூரிட்டி தொகை முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.
ஃபிக்சட் டெபாசிட்களுடன் ஒப்பிடுகையில் ரெக்கரிங் டெபாசிட்டில் நீங்கள் சேமித்த தொகையை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் வித்ட்ரா செய்யலாம் அல்லது அவசர சூழ்நிலைகளில் லோன் எடுக்கும் வசதியும் உள்ளது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
FD அல்லது RD? இரண்டில் எதை தேர்வு செய்ய வேண்டும்?
ஃபிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் ஆகிய இரண்டுமே குறுகிய கால பொருளாதார இலக்குகள் மற்றும் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் உள்ள சேமிப்பு திட்டங்கள் ஆகும். ஒரே நேரத்தில் உங்களால் பெரிய அளவு தொகையை டெபாசிட் செய்ய முடியும் என்கிற பட்சத்தில் நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை என்னால் சேமிக்க முடியும் என்று நினைப்பவர்கள் ரெக்கரிங் டெபாசிட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் உங்களுடைய பொருளாதார இலக்குகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் இரண்டில் உங்களுக்கு எது விருப்பமானது என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். எனினும் எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பும் பொருளாதார ஆலோசகரின் பரிந்துரைகளை பெறுவது நல்லது.
.
&w=750&resize=750,375&ssl=1)
