நல்ல ரிட்டன்களை பெற்றுத் தரும், அதே நேரத்தில் உங்களுடைய வரிப்பணத்தை சேமிக்கும் ஒரு முதலீட்டு திட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தபால் நிலைய திட்டங்கள் சிறந்த ஆப்ஷன்களாக இருக்கும்.
வங்கிகளைப் போலவே தபால நிலையத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு திட்டங்களில் நீங்கள் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை நல்ல வட்டி விகிதங்களில் பெறலாம். நல்ல வட்டி விகிதங்கள் மற்றும் வரி பலன்களை பெற நீங்கள் தபால் நிலைய 5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் (தபால் நிலைய FD) முதலீடு செய்வது சிறந்தது. இது போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் என்று அழைக்கப்படுகிறது. இந்த 5-வருட தபால் நிலைய FD என்பது வரி சேமிப்பு FD என்றும் அழைக்கப்படுகிறது. தபால் நிலைய FD தவிர, நீங்கள் நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (NSC) திட்டத்தில் முதலீடு செய்வதும் சிறந்த யோசனையாக இருக்கும்.
இந்த திட்டத்திலும் உங்களுக்கு நல்ல வட்டி விகிதம் மற்றும் வரி விலக்கு கிடைக்கிறது. தற்போது 5- வருட தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், NSC இல் ஒரு ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டி கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் 2,00,000 ரூபாய் பணத்தை 5-வருட தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட் மற்றும் 5- வருட NSC திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட் மற்றும் NSC திட்டத்தில் கிடைக்கும் ரிட்டன்கள்
நீங்கள் 2,00,000 ரூபாயை தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் பொழுது ஒரு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி என்ற அடிப்படையில் உங்களுக்கு 89,990 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இப்படி இருக்க உங்களுடைய மெச்சூரிட்டி தொகை 2,89,990 ரூபாயாக வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் தபால் நிலைய NSC திட்டத்தில் 2,00,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் 7.7 சதவீத வட்டி என்ற கணக்கில் 5 வருடங்களுக்கு உங்களுக்கு 89,807 ரூபாய் வட்டி என்ற கணக்கில் இறுதியாக 2,89,807 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.
அதிக வட்டி வழங்கப்பட்ட போதிலும் NSC திட்டத்தில் ஏன் குறைவான ரிட்டன் கிடைக்கிறது?
இங்கே சொல்லப்பட்டுள்ள கணக்குகளை பார்க்கும் பொழுது இரண்டு திட்டங்கள் மூலமாக கிடைக்கும் ரிட்டன்களிலும் லேசான வேறுபாடுகள் உள்ளது.NSC திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்பட்டாலும் அதன் மூலம் கிடைக்கும் ரிட்டன் குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும் FD திட்டத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. இதற்கான காரணம் தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. அதுவே NSC திட்டத்தில் ஆண்டுவாரியாக கணக்கிடப்படுகிறது.
Also Read |
குடும்பத்திற்கு ஒரே மகளா? மத்திய அரசின் மாதம் ரூ.35,000 வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா? தகுதி என்ன?
வரி பலன்கள்
வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் 5 வருட தபால் நிலைய மற்றும் 5- வருட NSC திட்டத்தில் ஒருவர் 1.50 லட்சம் ரூபாய் வரை வரி பலன்களை பெறலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
