• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எதில் அதிக ரிட்டன்? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
எதில் அதிக ரிட்டன்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன் திட்டங்களை வழங்க கூடியது ஃபிக்சட் டெபாசிட்கள் (FDs). சந்தையுடன் தொடர்பில்லாத முதலீட்டுடன் குறைந்தபட்ச அபாயத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இது. தங்களுடைய டெபாசிட்களுக்கு எந்த ஒரு ஆபத்து ஏற்படாத வகையில், அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வளர்ந்து தங்களது கைக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்போருக்கு ஃபிக்சட் டெபாசிட்கள் ஏற்றது.

FD-க்கள் பொதுவாக 1, 2, 3, மற்றும் 5 வருடங்கள் கால அளவுடன் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களால் வழங்கப்படுகிறது. 5 வருட ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்யும் ஒருவருக்கு வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான வரி விலக்கு கிடைக்கிறது.

விளம்பரம்

மறுபுறம் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தையுடன் தொடர்புடையவை. ரிட்டயர்மென்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது பெயர் குறிப்பிடுவது போல ஓய்வு காலத்தை எண்ணி முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நல்ல ரிட்டன்களை பெற்றுத் தருகிறது.

இது ஐந்து வருட லாக்-இன் பீரியட் அல்லது ஓய்வு கால வயதில் மெச்சூரிட்டி ஆகக் கூடியது. ஃபிக்சட் டெபாசிட் மற்றும் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் மூலமாக பெறப்படும் வருமானத்திற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஐந்து வருட ஃபிக்சட் டெபாசிட் மற்றும் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் ஆகிய இரண்டும் ஐந்து வருட லாக்-இன் காலத்துடன் வருவதால் ஐந்து வருடம் முதலீட்டுக்கு இந்த இரண்டு திட்டங்கள் மூலமாக கிடைக்கும் ரிட்டன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விளம்பரம்

5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.5,00,000 முதலீடு

– தபால் நிலையம் வழங்கும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது.

– ஒருவர் 5,00,000 ரூபாய் பணத்தை தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட்டில் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்யும் பொழுது அவருக்கு இறுதியாக 2,24,974 ரிட்டன் என்ற கணக்கில் 7,24,974 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.

– வேறு எந்தவிதமான முதலீட்டையும் செய்யாத நபர்கள் கூட இந்த ஐந்து வருட ஃபிக்சட் டெபாசிட் மூலமாக 1.50 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம்.

விளம்பரம்

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

ரிட்டயர்மென்ட் ஃபண்டில் 5 லட்ச ரூபாய் முதலீடு:

– ICICI ப்ரூடன்ஷியல் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் என்பது சிறந்த ஐந்து வருட மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக கருதப்படுகிறது.

– ஐந்து வருட காலத்திற்கு இந்த பணத்திற்கு 23.98 சதவீத ரிட்டன் கிடைக்கும்.

– ஒருவர் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை 5 வருடங்களுக்கு முன்பு இந்த மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டயர்மென்ட் திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் அவருக்கு 9,64,631 ரூபாய் லாபமாக கிடைக்கும். மொத்தமாக அவருடைய முதலீட்டிற்கு 14,64,631 ரூபாய் கிடைக்கும்.

விளம்பரம்

– ஒரு லட்ச ரூபாய் வரையிலான நீண்ட கால லாபத்திற்கு ஒருவர் வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.

.

Read More

Previous Post

ஓபனர்கள் பொறுப்பான ஆட்டம் – சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு @ ஐபிஎல் | Royal Challengers Bengaluru scored 218 runs against csk

Next Post

'சிங்கப்பூரின் பிரதமரான லாரன்ஸ் வோங்' – 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?

Next Post
'சிங்கப்பூரின் பிரதமரான லாரன்ஸ் வோங்' – 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?

'சிங்கப்பூரின் பிரதமரான லாரன்ஸ் வோங்' - 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin