• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு | Plague in Russia: Lab Worker Dies of Severe Pneumonia, What really happened in the research lab

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு | Plague in Russia: Lab Worker Dies of Severe Pneumonia, What really happened in the research lab
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Monday, October 5, 2026, 18:45 [IST]

மாஸ்கோ: ரஷ்யாவில் ஆய்வகத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் கடுமையான நிமோனியாவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 197 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆய்வகத்தில் வழக்கமான ஆய்வு பணிகளை மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக ஒரு டெஸ்ட் டியூப்பை உடைத்திருக்கிறார். அதுவே இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள ஆய்வகத்தில் பல பாக்டீரியா, வைரஸ்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி பிளேக் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா இருக்கும் டெஸ்ட் டியூப் வைத்து ஆய்வு செய்தபோது அது எதிர்பாராத விதமாக உடைந்துள்ளது. இதைத் தொடர்ந்தே அவருக்கு நிமோனியா ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் ரஷ்யா இதுவரை உறுதி செய்யவில்லை.

Russia

டெஸ்ட் டியூப்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஷெலெகோவ் நகரில் செயல்படும் பிளேக் தடுப்பு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியவர் டாரியா ஷிபிலோவா. இவர் பிளேக் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா இருக்கும் டெஸ்ட் டியூப் வைத்து ஆய்வு செய்தபோது அது எதிர்பாராத விதமாக உடைந்துள்ளது. இதைத் தொடர்ந்தே அவருக்கு நிமோனியா ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 29-ம் தேதி கடுமையான நிமோனியாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அக்டோபர் 2-ம் தேதி உயிரிழந்தார். அதேநேரம் இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் ரஷ்யா இதுவரை உறுதி செய்யவில்லை. ஷிபிலோவாவுக்கு காரணம் தெரியாத நிமோனியா இருந்ததாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் பணியாற்றிய இடத்தில் இருந்தே பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் நிலைமை சீராகவே இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

197 பேர்

அதேநேரம் ஷிபிலோவாவுடன் தொடர்பில் இருந்த 197 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 189 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கண்காணிப்பில் உள்ள யாருக்கும் அறிகுறிகள் இல்லை என்றும் அவர்களின் பரிசோதனை முடிவுகளில் பிளாக் நோய் இல்லை என்றே வந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இருவருக்கு கொரோனா தொற்றும், மேலும் இருவருக்கு சாதாரண சளியை ஏற்படுத்தும் ரைனோவைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டது.

ரஷ்ய ஆய்வகத்தில் லீக் ஆன ஆபத்தான வைரஸ்? 28 வயது பெண் உயிரிழப்பு! கண்காணிப்பு வளையத்தில் 200+ பேர்

ரஷ்ய ஆய்வகத்தில் லீக் ஆன ஆபத்தான வைரஸ்? 28 வயது பெண் உயிரிழப்பு! கண்காணிப்பு வளையத்தில் 200+ பேர்

ஷிபிலோவாவுக்கு எப்படி நோய் வந்தது?

இதற்கான தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது இரண்டு வெவ்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தகவலின்படி, ஆய்வகத்தில் டெஸ்ட் டியூப் குழாய் உடைந்த சம்பவத்துக்கு பிறகு ஷிபிலோவா நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதை ரஷ்யா உறுதி செய்யவில்லை. மறுபுறம் அவர் சமீபத்தில் புரியாட்டியா என்ற ஊருக்கு சென்றிருந்தபோது நோய் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், ஷிபிலோவா அங்கு செல்லவே இல்லை எனவும் அங்குபிளேக் பரவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல் இருப்பதால் தெளிவான காரணம் தெரியவில்லை.

ஆய்வகத்திலிருந்து வெளியேறிய ஆபத்தான வைரஸ்.. இந்தியர்களுக்கு பாதிப்பா? நிபுணர்கள் சொல்லும் பதில்!

ஆய்வகத்திலிருந்து வெளியேறிய ஆபத்தான வைரஸ்.. இந்தியர்களுக்கு பாதிப்பா? நிபுணர்கள் சொல்லும் பதில்!

நிமோனிக் பிளேக் என்றால் என்ன?

நிமோனிக் பிளேக் என்பது Yersinia pestis என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய். இதே பாக்டீரியாதான் பியூபோனிக் பிளேக் எனப்படும் நோயையும் ஏற்படுத்துகிறது. நிமோனிக் பிளேக் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்கு இருமும்போது, தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் இது பரவக்கூடும். காய்ச்சல், தலைவலி, உடல் பலவீனம், இருமல் போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் உயிரிழப்பே கூட ஏற்படும்.

முதல் அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் சிகிச்சை தொடங்குவது உயிரிழப்பு அபாயத்தை குறைக்கும் என்பதாலேயே இப்போது உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

English summary

A female laboratory worker in Russia has died after developing severe pneumonia(ரஷ்யாவில் பரவும் பிளாக் நோய் பாதிப்பு): Plague in Russia latest news in tamil.

Read More

Previous Post

மலையக ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின

Next Post

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் …

Next Post

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் …

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin