• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

எதிர்க்கட்சித் தலைவர்கள் பெட்ரோனாஸை ஆதரிக்கின்றனர், சரவாக்கின் தேவையை ஒப்புக்கொள்கின்றனர்

GenevaTimes by GenevaTimes
May 15, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
எதிர்க்கட்சித் தலைவர்கள் பெட்ரோனாஸை ஆதரிக்கின்றனர், சரவாக்கின் தேவையை ஒப்புக்கொள்கின்றனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


”முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், பெட்ரோனாஸ் அந்தஸ்துக்கு பாதிப்பு இல்லாமல் சரவாக்கிற்கும் லாபம் தரும் தீர்வு இருக்கிறது என்கிறார்.”

கோலாலம்பூர்

அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் இரு கட்சிகள் அபூர்வமாக ஒற்றுமையுடன் பெட்ரோனாஸை நலன்களை தற்காக்கும் மத்திய அரசாங்கத்திற்கு கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன. சரவாக்கைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, பெட்ரோனாஸின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மத்திய அரசு நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர்.

அவர்கள், சரவாக்கின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டாலும், அது நாட்டின் ‘தங்க முட்டை இடும் வாத்து’ என அழைக்கப்படும் பெட்ரோனாஸை பலிகொடுக்காமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின், 2020இல் சரவாக்குடன் வணிக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டவர், “பெட்ரோனாஸ் மூலம் நாடு கடந்த 50 ஆண்டுகளாக பயனடைந்துள்ளது. தேசிய அடையாளமாக திகழும் பெட்ரோனாஸை அழித்து விட வேண்டாம் என்று எச்சரித்தார்.

“பெட்ரோனாஸுக்கு ஏற்படும் இழப்பு சரவாக்கையும் கடுமையாக பாதிக்கும். அதனால் தங்க முட்டை இடும் வாத்தை கொல்லாதீர்கள்,” என்று எச்சரித்தார் அந்த முன்னாள் பிரதமர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற மக்களவை தலைவரும் லாருட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்ஸா ஸைனுடின் கூறுகையில், “நியாயமான ஒப்பந்தம் என்பது உண்மையான தீர்வைத் தேடுவதாகும். தங்க முட்டை இடும் வாத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமாகும் என்றார்.

மேலும் முஹிடின் கருத்தையும் அவர் ஆமோதித்தார்.

மாச்சாங் எம்.பி. வான் அமாட் ஃபைசால் வான் அமாட் கமால், “நாட்டின் உலகத் தரத்திலான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் பெட்ரோனாஸை பலவீனப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.

அணியில் உள்ள மிகச் சிறந்த ஆட்டக்காரரை ஏன் கொல்ல வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

புத்ராஜெயா எம்.பி. ரட்ஸி ஜிடின், பெட்ரோனாஸ் – சரவாக்கிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெட்ரோஸ் இடையிலான உரசல்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். பெட்ரோனாஸ் வளர்ச்சியும் பெருமைகளும் மாண்பும் வெறும் வரலாறாக மட்டும் இருந்து விடக் கூடாது என்பதற்கு இத்தீர்வு அவசியம் என்றார்.

பாஸ் இளைஞர் தலைவர் அமாட் ஃபட்லி ஷாரி, பெட்ரோனாஸ் உரிமைகள் வீட்டுக்கொடுக்கப்பட்டால் பெட்ரோனாஸ் எனும் பெரு நிறுவனத்தை பலவீனப்படுத்திவிடும். தேசிய கருவூலத்தின் வருமானத்தை 30%-40% வரையிலான இழப்பு ஏற்படும் என எச்சரித்தார்.

“பெட்ரோனாஸை இழந்தால், அதன் நிதி இழப்புத் தாக்கத்தை அரசாங்கம் வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகையில், பெட்ரோனாஸ் அந்தஸ்தை பாதிக்காமல் “சரவாக் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு வேறு வழிகள் உண்டு என்று சொன்னார்.

சரவாக்கிற்கு பலன் தரும் மற்ற வழிகள் நிச்சயம் உண்டு. பெட்ரோனாஸை அழிப்பது என்பது ஒரு மோசமான முடிவு. மலேசியர்களின் பெருமைக்குரிய ஒரே நிறுவனம் என்றார் அவர்.

“பெட்ரோனாஸ் என்பது தேசிய செல்வத்தை திரட்டுவதிலும், பகிர்ந்தளிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது என்று மகாதீர் குறிப்பிட்டார்.

Radzi Jidin.

1974 ஆம் ஆண்டில் பெட்ரோனாஸை தோற்றுவித்தவரும் முன்னாள் நிதியமைச்சருமான தெங்கு ரஸாலி ஹம்ஸா, “சரவாக்கின் தேவைகளைப் புரிந்துக் கொண்டு அதற்குரிய தீர்வைக் காண வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதேசமயத்தில் நாட்டு நலன்களை தியாகம் செய்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.

கைவிடப்பட்டதாக சரவாக் நினைக்கக் கூடாது. பிரதமரிடம் இந்த விவகாரத்தை கொண்டு செல்லலாம். ஆனால், தயவு செய்து தங்க முட்டையிடும் வாத்தை கொன்றுவிட வேண்டாம் உனாறு அவர் அறிவுருத்தினார்.

சர்ச்சை!

தொடக்கத்தில் சரவாக்கின் தன்னாட்சி முயற்சிக்கு மக்கள் அனுதாபம் காட்டினர். ஆனால் அந்த மாநிலம் பெட்ரோனாஸ் சாரிகாலி நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதும் நிலைமை மாறியது. இந்த. நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது என்று சரவாக் குற்றம் சாட்டியது.

இந்த நடவடிக்கை பத்திரிகைகள், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் பார்வையும் மாறியது. நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்துமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக, சரவாக் பெட்ரோஸை மாநிலத்தின் ஏகபோக எண்ணெய் தோண்டும் நிறுவனமாக நியமித்து, பெட்ரோனாஸிடமிருந்து கட்டுப்பாடு மேலும் விலை நிர்ணயம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, வருவாயை சுயமாக சேகரிக்க முயற்சித்தது.

இதுவரை, பெட்ரோனாஸ் இந்த ஒட்டுமொத்த சங்கிலியில் – உற்பத்தி முதல் விற்பனை வரை – ஒரே கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, வருடத்திற்கு RM10-20 பில்லியன் வரை வருமானத்தை ஈட்டியது.

இப்போது அந்த வருமானம் பெட்ரோனாஸை பலிகொடுத்துவிட்டு சரவாக்கு அந்த வருமானத்தை சம்பாதிக்கும் நிலை உருவாகிறது.

Ahmad Fadhli Shaari.

பெட்ரோனாஸ் தேசிய கருவூலத்திற்கு ஆண்டுக்கு RM30- RM50 பில்லியன் வரை வருமான பங்களிப்பை வழங்குகிறது. இது மலேசியாவின் மொத்த  வருமானத்தில் 20% ஆகும். இது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காட்டுகிறது. இதன் வழி விலை நிர்ணயிப்பு அதிகாரத்தை பெட்ரோனாஸ் முழுமையாக இழக்கும். செயலாக்கம் முடக்கம் காணும். மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

என்ன பந்தயத்தில் உள்ளது?

மலேசிய நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் திரிசியா இயோ கூறுகையில், “இந்த சர்ச்சை சற்றும் பொருத்தமில்லாத நேரத்தில் தலைத் தூக்கி இருக்கிறது. பெட்ரோனாஸ் எப்போதும் தேசிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. அதன் செயல்பாட்டை அச்சுறுத்துவது அனைத்து மலேசியர்களின் நலன்களை பாதிக்கும் என்றார்.

இதன் தாக்கம் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிளந்தான், திரெங்கானு, சபா ஆகிய மாநிலங்களும் இந்த அடிச்சுவட்டை பின்பற்றும் ஆபத்து உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தத் துறையை நம்பி 400,000 வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, தாக்கங்களும் பாதிப்புகளும் மிகப் பெரிதாக இருக்கும்.

சரவாக் ஒத்துழைக்கத் தயார் – பிரிமியர்

இந்நிலையில் இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பதற்கு தயார் என்று சரவாக் பிரிமியர் அபாங் ஜொஹாரி ஒபெங் கூறினார்.

“நாங்கள் பெட்ரோனாஸுக்கு மாற்றாக வேறு ஒன்றை காண விரும்பவில்லை. எங்களுக்கும் பெட்ரோனாஸ் தேவை. நாங்கள் இணைந்து வேலை செய்யவே விரும்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.

அவரின் இந்த அறிக்கையை துணைப் பிரதமரும் சரவாக் மண்ணின் மைந்தருமான ஃபடிலா யூசோப் ஆமோதித்தார்.

பெட்ரோனாஸ் தோற்றுவிக்கப்பட்டு சரவாக்கில் ஒட்டு மொத்த எண்ணெய், கியாஸ் தொழில் துறையை நிர்வகித்து வருகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம்இதற்கு முன்னதாக1974 பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தின் ஷரத்துக்கள் கீழ் எந்த ஒப்பந்தமும் நிலைநிறுத்தப்படும்என்று நாடாளுமன்றத்தில் உறுதி அளித்திருக்கிறார் என்று சரவாக் பொது மராமத்து, தொலைத்தொடர்பு அமைச்சர் ஜுலாய்ஹி நராவி கூறினார்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் 1974 பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் கூட்டரசு சட்டம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளன என்றார் அவர்

சட்டத் தெளிவின்மை.

சரவாக் பெட்ரோனாஸ் வருமானத்தில் அதிக பங்கை கோருகிறது.
அவர்கள் 1954 இல் எலிஸபெத் மகாராணி வழங்கிய அரச ஆணை மூலம் மாநில எல்லைகள் விரிவடைந்தன.

அவர்கள் 1958 எண்ணெய் சுரங்க சட்டம், 2016 கியாஸ் விநியோக ஆணை ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு பெட்ரோஸ் நிறுவனமும் உருவாக்கப்பட்டது.

ஆனால் சட்ட நிபுணர்கள், 1974 பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் மட்டுமே செல்லும் என்கிறார்கள் – அது மாநில சட்டங்களை மீறுவதாக உள்ளது.

இதனால் தற்போது ஒரு சட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. “சரியான அதிகாரம் யாரிடம் என்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கே தெரியவில்லை,” என திரிசியா இயோ கூறுகிறார்.

Jaziri Alkaf.

அனைத்துலக ஷெல் எண்ணெய் நிறுவனம் கூட யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கிறது.

கோனோகோபிலிப்ஸ் நிறுவனமும் RM13.7 பில்லியன் மதிப்புள்ள கடல் திட்டத்திலிருந்து விலகியுள்ளது.

பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இணைந்து செயல்பட வேண்டும்

“சரவாக்கின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளலாம். ஆனால் பெட்ரோனாஸ் பாதிக்கப்படக்கூடாது.
பெட்ரோஸ் ஓர் 7 ஆண்டுகள் நிறுவனம் தான். அதை நிர்வகிப்பதற்கு பெட்ரோனாஸின் நிபுணத்துவமும் தொழில்நுட்பமும் தேவை” என்று திரிசியா இயோ கூறினார்.

இதனை சரவாக் பிகேஆர் முன்னாள் தலைவர் இசஸ்வார்டி மோர்னி ஒப்புக்கொள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட செயல் தங்க முட்டை இடும் வாத்தை கொன்றுவிடப் போகிறோமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பெரிக்காத்தான் நேஷனல் சரவாக் மாநில தலைவர் ஜஸிரி அல்காஃப், “நாம் உள்ளூரில் மட்டும் ஜெயிக்க வேண்டாம், உலகளவில் வெற்றிபெற வேண்டும். வாத்தை மேலும் முட்டை இடும்படி செய்ய வேண்டும்,” என்றார்.

இந்த சர்ச்சைகள் நாட்டின் இறையாமையை பாதிக்கும்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா, “பெட்ரோஸ் வெளிநாட்டு நிறுவனங்களை அழைக்க நேரிட்டால், அது மலேசியா சுயாதீனத்துக்கு பாதிப்பு,” என்றார்.

திரிசியா இயோ “விரைவாக முடிவெடுக்க வேண்டாம். 6-12 மாத பணிக்குழு அமைக்க வேண்டும்,” என கூறினார்.

The post எதிர்க்கட்சித் தலைவர்கள் பெட்ரோனாஸை ஆதரிக்கின்றனர், சரவாக்கின் தேவையை ஒப்புக்கொள்கின்றனர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

’பாஜக உடன் தவெக கூட்டணியா? விஜய்யின் திட்டம் என்ன?’ உடைத்து பேசிய சிடிஆர் நிர்மல் குமார்!

Next Post

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

Next Post
அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin