இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை தங்கள் அகாடமியில் பயிற்சி பெற அனுமதித்ததற்காக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸை சாடியுள்ளார்.
ராபின் உத்தப்பா தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்த வீடியோ ஒன்றில் பேசுகையில், “ரச்சின் ரவீந்திரா இங்கு வந்து சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். சிஎஸ்கே ஒரு அற்புதமான அணியாக உள்ளது, அது எப்போதும் அதன் வீரர்களைக் கவனித்துக் கொள்ளும். ஆனால் ஒரு வெளிநாட்டு வீரர் இந்திய அணியை எதிர்த்து விளையாடும்போது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, நாட்டின் நலன் முன்னோக்கி இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
செப்டம்பர் 2024 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்தின் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக CSK அகாடமியில் ரச்சின் ரவீந்திரா பயிற்சி பெற்றார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது அவருக்கு இந்த பயிற்சி உதவியது.
இதையும் படிக்க:
IPL மெகா ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம் தெரியுமா?
அக்டோபர் 16 முதல் 20 வரை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் ரச்சின் ரவீந்திரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தும் இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் விளாசியிருந்தார்.
மேலும் இதுகுறித்து உத்தப்பா கூறும்போது “சிஎஸ்கே எப்பொழுதும் தங்கள் வீரர்களை கவனித்துக்கொள்வதில் எனக்கு ஆச்சரியமில்லை. நான் சிஎஸ்கேவை முற்றிலும் நேசிக்கிறேன், ஆனால் நாடு என்று வரும்போது, ஒரு கோடு இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ரச்சின் ரவீந்திரா முக்கிய காரணமாக இருந்தார். பெங்களூருவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேவில் மைதானத்திலும், மும்பை வான்கடே மைதானத்திலும் நடந்த அடுத்த இரண்டு ஆட்டங்களில் முறையே 113 ரன்கள் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
இந்தியாவில் இந்த வரலாற்று வெற்றியை பெற்றப்பிறகு, அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடக்கும் WTC 2025 இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் நியூசிலாந்து நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
