Last Updated:
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டன.
விமான எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு விண்ணை முட்டும் அளவுக்கு எரிபொருள் விலையேறியது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
#WATCH | Union Cabinet decisions | Delhi: Union Minister Ashwini Vaishnaw says, “West Asia crisis has caused a major issue. The price of Aviation Turbine Fuel (ATF) have increased 2.5 times, increasing from Rs 60 per litre in March to Rs 142 per litre in May 2026. To ensure that… pic.twitter.com/rFifwIldSO
— ANI (@ANI) June 3, 2026
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டு பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதாக கூறினார். இயல்பு நிலை திரும்பியதும் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பணம் திரும்பப் பெறப்படும் என்றார்.
Jun 04, 2026 12:20 PM IST
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி… விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!


