• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ | iPL Commission keen to hold remaining matches BCCI awaiting central government decision

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ | iPL Commission keen to hold remaining matches BCCI awaiting central government decision
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: எஞ்​சி​யுள்ள போட்​டிகளை நடத்​து​வதற்கு ஐபிஎல் ஆணை​யம் தீவிர​மாக உள்​ளது. போட்​டிகளை நடத்​து​வது தொடர்​பாக மத்​திய அரசு முடிவுக்​காக தற்​போது இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) காத்​திருக்​கிறது.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு​வார காலத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக பிசிசிஐ அறி​வித்​தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணி​களி​லும் இடம் பெற்​றிருந்த வெளி​நாட்டு வீரர்​களை பாது​காப்​பாக அவர்​களது தாயகத்​துக்கு அனுப்பி வைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. மேலும் இந்​திய வீரர்​கள் தங்​களது நகரங்​களுக்கு சென்​றடைய​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் பெரும்​பாலான வெளி​நாட்டு வீரர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ளனர். இதனிடையே, நேற்று முன்​தினம் மாலை இந்​தி​யா,​பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்த அறி​விப்பு வெளி​யானது. இதனால் எல்​லைப் பகு​தி​யில் இயல்பு நிலை விரை​வில் திரும்​பும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதைத் தொடர்ந்து எஞ்​சி​யுள்ள 18 போட்​டிகளை நடத்​து​வதற்கு ஐபிஎல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. போட்​டிகளை நடத்​து​வது தொடர்​பாக மத்​திய அரசின் ஒப்​புதலுக்​காக பிசிசிஐ தற்​போது காத்​திருக்​கிறது.

அநேக​மாக வரும் 15 அல்​லது 16-ம் தேதி போட்​டிகள் மீண்​டும் தொடங்க வாய்ப்​புள்​ளது. ஒரே நாளில் இரண்​டு, இரண்டு ஆட்​டங்​களாக நடத்​த​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் மே 30-ம் தேதி இறு​திப் போட்​டியை நடத்​த​வும் பிசிசிஐ முடிவு செய்​துள்​ள​தாகத் தெரி​கிறது.

இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்​கியா கூறும்​போது, “ஒரு வாரத்​துக்கு போட்​டிகளை நாங்​கள் தள்​ளி​வைத்​தோம். அந்​தக் காலக்​கெடு முடிவதற்கு இன்​னும் 4 நாட்​கள் உள்​ளன.

போர்ப்​ப​தற்​றம் தொடர்​பாக தற்​போது நடந்து வரும் சூழ்​நிலையை பிசிசிஐ உன்​னிப்​பாக கவனித்து வரு​கிறது. இதையடுத்து ஐபிஎல் பங்​கு​தா​ரர்​கள், அணி நிர்​வாகங்​கள், மத்​திய அரசின் உயர் அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின்​னர் போட்​டியை மீண்​டும் தொடங்​கு​வது தொடர்​பாக அறிவிக்​கப்​படும். ஒரே நாளில் 2 ஆட்​டங்​களை நடத்​த​வும் முடிவு செய்​துள்​ளோம்.

இது​போன்ற சூழ்​நிலைகளில் மத்​திய அரசின் ஒப்​புதலைப் பெறு​வது அவசி​ய​மாகும். விரை​வில் போட்​டி தொடங்​கவுள்​ள தேதியை பிசிசிஐ அறிவிக்​கும்​” என்​றார்​.



Read More

Previous Post

DGMO: இராணுவத்தில் டிஜிஎம்ஓ என்றால் யார்? அவரின் பங்கு என்ன?

Next Post

Ration Card: புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்துள்ளீர்களா..? விண்ணப்ப நிலையை தெரிந்துகொள்வது எப்படி

Next Post
Ration Card: புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்துள்ளீர்களா..? விண்ணப்ப நிலையை தெரிந்துகொள்வது எப்படி

Ration Card: புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்துள்ளீர்களா..? விண்ணப்ப நிலையை தெரிந்துகொள்வது எப்படி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin