• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எச்சரிக்கை விடுத்த அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
எச்சரிக்கை விடுத்த அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 13, 2025 7:26 PM IST

இஸ்ரேல் காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில், அல்-அஹ்லி மருத்துவமனை சேதம் அடைந்தது. நோயாளி ஒருவர் பலியானார்.

கோப்புப் படம்கோப்புப் படம்
கோப்புப் படம்

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது.

இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (13ஆம் தேதி) காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் இன்று இரண்டு ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதையும் படியுங்கள் : சமூக ஊடகங்களில் இதைச் செய்தால் விசா, குடியிருப்பு அனுமதி கிடையாது…! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு…

இந்தத் தாக்குதல் குறித்து பாலஸ்தீன சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலில், ராணுவம் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து அனைவரையும் வெளியேற்றவும் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியிலேயே இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் துவங்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தத் தாக்குதலில், மருத்துவமனையின் வரவேற்பு பகுதியும், அவசரப் பிரிவு பகுதியும் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நோயாளிகளை வெளியேற்றும்போது, அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த ஒரு நோயாளி பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

First Published :

April 13, 2025 7:26 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

எச்சரிக்கை விடுத்த அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

Read More

Previous Post

ஐபிஎல் 2025: அடுத்தடுத்து மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடி.. டெல்லி பவுலர்களுக்கு எதிராக 10 சிக்ஸர்கள்.. கடின இலக்கு

Next Post

பூஜாங் பள்ளத்தாக்கு மீதான அடையாள அரசியல் தாக்கம் – Malaysiakini

Next Post
பூஜாங் பள்ளத்தாக்கு மீதான அடையாள அரசியல் தாக்கம் – Malaysiakini

பூஜாங் பள்ளத்தாக்கு மீதான அடையாள அரசியல் தாக்கம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin