Last Updated:
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, வர்த்தக வரி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை இந்தியாவுக்கு வழங்கியது.
உலக நாடுகளில் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறுவதற்கான முழு சுதந்திரம் இந்தியாவுக்கு உள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, வர்த்தக வரி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை இந்தியாவுக்கு வழங்கியது.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ரஷ்யா மட்டுமே விநியோகிக்கவில்லை என்றும் இதை ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் நன்கு அறியும் எனவும் தெரிவித்தார்.
இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதாகவும் அதில் புதிது எதுவும் இல்லை எனவும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.


