ஐபில் வரலாற்றிலேயே இல்லாத வகையில் 277 ரன்களை ஒரு இன்னிங்க்சில் ஐதராபாத் அணி நேற்று விளாசி எடுத்து மும்பை அணியை தடுமாற வைத்துவிட்டது. இந்நிலையில் தனது தலைமையிலான அணியின், இரண்டாவது தோல்வி பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்திருக்கிறார்.
தங்கள் தரப்பு சிறப்பாக பந்து வீசியதாக கூறியுள்ள ஹர்திக் பாண்டியா, ஆனால் சன்ரைசர்ஸ் அணி அதைவிட சிறப்பாக பேட்டிங் செய்ததாக கூறினார். தங்கள் தரப்பில் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக இருந்ததாக கூறிய ஹர்திக் வேறு சில விஷயங்களை முயற்சி செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
278 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப்பிடிக்க முடியாமல் மும்பை அணி தடுமாறி கடைசியில் தோல்வியை தழுவியது. எவ்வளவோ முயன்றும் மும்பை அணியால் கடைசியில் 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நேற்றைய போட்டியில் அறிமுக வீரராக மும்பை அணியில் இடம்பிடித்து பந்துவீசிய தென்னாப்ரிக்க வீரர் வீனா மபாகா, மோசமான சாதனை ஒன்றையும் நிகழ்த்தியிருக்கிறார். அதுவும் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர் என்பதே அந்த சாதனையாகும்.
நேற்றைய போட்டியில் பும்ராவைத் தவிர மற்ற அனைவருமே ஓவருக்கு 10 ரன்களுக்கும் அதிகமாகவே விட்டுக்கொடுத்தனர். இதுபற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, விக்கெட் அருமையாக இருந்ததாக கூறினார். அதே நேரம் ஐதராபாத் அணி வீரர்கள் அட்டகாசமாக விளையாடியதாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூலாக பதில் அளித்தார்.
நேற்றைய போட்டியில் நிறைய கற்றுக் கொண்டதாக கூறியுள்ள ஹர்திக் பாண்டியா , தங்கள் அணி வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் பிடித்திருந்தது என்றார். நடப்புத் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…