• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது” – எஸ்.ஐ.ஆர். வழக்கில் மம்தா பானர்ஜி ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் வாதம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது” – எஸ்.ஐ.ஆர். வழக்கில் மம்தா பானர்ஜி ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் வாதம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 04, 2026 3:14 PM IST

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணையில் மாநில முதலமைச்சர் ஆஜராகி வாதிட்டார்.

News18
News18

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்ந்து மொத்தம் 12 மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்டுவருகிறது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆறு கடிதம் எழுதியும் தங்களுக்கு பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசு தரப்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆஜராகி வாதிட்டார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணையில் மாநில முதலமைச்சர் ஆஜராகி வாதிட்டார்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளால் ஏறக்குறைய ஒரு கோடியே 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு கோடியே 34 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஒருவர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்த தரவுகளை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை என மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

சுமார் 63 லட்சம் நபர்களின் பெயர் சேர்ப்பு அல்லது நீக்குதல் தொடர்பான முடிவு நிலுவையில் உள்ள நிலையில், எஞ்சியுள்ள 4 நாட்களில் நாளொன்றுக்கு 15 லட்சம் பேரின் மனு குறித்து முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி கூறினார்.

இது தொடர்பாக 6 முறை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்திற்கு நீதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி, மக்களின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது” – எஸ்.ஐ.ஆர். வழக்கில் மம்தா பானர்ஜி ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் வாதம்

Read More

Previous Post

எப்ஸ்டீனின் ஆவணங்கள்…! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

Next Post

IND vs PAK | இந்தியாவுடன் விளையாட மறுப்பு… பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஐசிசி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
IND vs PAK | இந்தியாவுடன் விளையாட மறுப்பு… பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஐசிசி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

IND vs PAK | இந்தியாவுடன் விளையாட மறுப்பு... பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஐசிசி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin