[ad_1]
திமுக ஆட்சியின் முதலீடுகளின் நிலை பற்றி ஏன் அறிக்கையாக வெளியிடுவதில்லை? குறைந்தபட்சம் சட்டமன்றத்தில்கூட இதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லையே ஏன்? இந்த மொத்த விவரங்கள்கூட இவர்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடும் செய்தியில் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. எ மத்திய அரசு வெளிநாட்டு மூலதனம் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் 2022- 23-ல் தமிழ் நாடு பெற்ற அந்நிய முதலீடு வெறும் 17,247 கோடி ரூபாய் என்றும், 2023-24ல் 20,157 கோடி ரூபாய் என்றும், 2024-25-ல் 31,103 கோடி ரூபாய் தான் என்றும், ஆகமொத்தம் 3 ஆண்டுகளில் 2025 மார்ச் மாதம் வரை 68,507 கோடி ரூபாய் மட்டுமே மூலதனமாகப் பெற்று, ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது. தமிழ் நாட்டை விட பல மடங்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் எல்லாம் பெற்றுள்ளன. டெல்லியும், தமிழகத்தை விட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ் நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?