Last Updated:
Vegetable Prices| படிப்படியாக விலை உயர்ந்து காணப்படும் பீன்ஸ். காய்கறி விலை உயர்வுக்கு காரணம் என்ன? விரிவாக காணலாம் இங்கு.
விழுப்புரம் காய்கறி சந்தையில் சென்ற வாரம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இந்த வாரம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விளைச்சல் மற்றும் வரத்துக் குறைவு காரணமாகவும் பீன்ஸ் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் பெய்த வரும் மழையின் காரணமாக, பல பகுதிகளில் விளையும் காய்கறியின் விளைச்சல் குறைந்து காணப்படுவதால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வருகை புரியும் காய்களில் வரத்து குறைவாக இருக்கிறது. அந்தவகையில் பீன்ஸ் வரத்து குறைவாக வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் 100 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் காய்கறி சந்தையில், ஒரு வாரத்திற்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ், இந்த வாரம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுபோல 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் இன்று 60 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் 80 ரூபாய்க்கும் வைக்கப்படுகிறது. மேலும் சௌசௌ, பீட்ரூட், இஞ்சி, பச்சை, மிளகாய், கோஸ், அவரை, முருங்கைக்காய் போன்ற 20 ரூபாய் அதிகரித்து விற்கப்படுகிறது.
காய்கறியின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு காரணமாக, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். விலை உயர்வு என்றாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் இன்னும் கூடுதல் விலை ஏற்றம் காணப்படுமோ என்ற அச்சத்தில் வாங்குகிறார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காய்கறி வாங்கு வரும் பொதுமக்கள் பீன்ஸ், கேரட், கத்திரிக்காய் விலை கேட்டதும் ஒரு கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட கால் கிலோ வாங்கி செல்கிறார்கள் வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வு காரணமாக கிலோ கணக்கில் பீன்சை வாங்கி சென்ற தாய்மார்கள் கால் கிலோ, அரைகிலோ என வாங்கி செல்கின்றனர்.
June 05, 2025 6:45 PM IST

