• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எகிப்து மம்மிக்களின் 5000 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தும் தொழில்நுட்பம்

GenevaTimes by GenevaTimes
February 16, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
எகிப்து மம்மிக்களின் 5000 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தும் தொழில்நுட்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 16, 2025 7:24 PM IST

மரணத்திற்கு பின்னரும் இன்னொரு வாழ்க்கை இருப்பதாக அன்றைய எகிப்து ஆட்சியாளர்கள் நம்பியுள்ளனர். அதன் காரணமாக தங்களது உடல்கள் சிதைவடையாமல் இருப்பதற்காக இந்த பதப்படுத்தும் பொருட்களை இறந்த உடல்கள் மீது தடவி கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்துள்ளனர்.

News18News18
News18

5000 ஆண்டுகள் கடந்த பின்னரும் எகிப்தில் உள்ள மம்மிக்களின் உடல்கள் சிறிதும் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இவை 5000 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்றைக்கும் அதிசயமாக இருக்கிறது.

உலகின் அதிசயங்களில் ஒன்றாக 5000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட பிரமிடுகள் கருதப்படுகின்றன. அன்றைய காலத்தில் வாழ்ந்த எகிப்து அரசர்களின் உடல்கள் இந்த பிரமிடுகளில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. பிரமிடுகள் அமைக்கப்பட்டு 5000 ஆண்டுகள் கடந்த நிலையில் அவற்றில் உள்ள அரசர்களின் உடல்கள் இன்றைக்கும் கெட்டுப் போகாமல் உள்ளன.

தொழில் நுட்பமும் அறிவியலும் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இறந்த உடல்களை பாதுகாப்பது என்பது எளிதானதாக கருதப்படுகிறது. ஆனால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை அந்த எகிப்து ஆட்சியாளர்கள் செய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து எகிப்து பிரமிடுகள் அதில் உள்ள மம்மிக்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உடல்களை பதப்படுத்துவதற்கு எந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மம்மிக்களின் உடல்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஆய்வகத்தில் ரசாயன கலவை தயாரிக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். அந்த மாதிரிகள் சிறிதும் கெடாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாசனை திரவியங்களை பசை போன்று மம்மி களின் உடல்களில் பதப்படுத்தும் போது பூசியுள்ளனர். இந்த வாசனை பொருட்கள் உடல்கள் சிதைவடையாமல் பாதுகாத்து வைத்துள்ளன.

அதாவது மரணத்திற்கு பின்னரும் இன்னொரு வாழ்க்கை இருப்பதாக அன்றைய எகிப்து ஆட்சியாளர்கள் நம்பியுள்ளனர். அதன் காரணமாக தங்களது உடல்கள் சிதைவடையாமல் இருப்பதற்காக இந்த பதப்படுத்தும் பொருட்களை இறந்த உடல்கள் மீது தடவி கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்துள்ளனர்.

இந்த மம்மிபிகேசன் எனப்படும் பதப்படுத்தலுக்கு எண்ணெய், மெழுகு, வாசனை திரவியங்கள், உள்ளிட்ட பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன,

இருப்பினும் இந்த பொருட்கள் எப்படி உருவாக்கப்பட்டவை என்பதை இன்னும் அறிவியலாளர்களால் உறுதிபட நிரூபிக்க முடியவில்லை, இன்னும் சில ஆய்வாளர்கள் உப்பு, ரெசின், மசாலா பொருட்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க – Zoo-விற்கு தனியாக வரும் ஆண்களுக்கு தடை… காரணம் கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க

இந்த பதப்படுத்தலுக்காக 5 வகையான எண்ணெய், 4 வகையான ரெசின் பசைகள், இலை தலைகள், மணல், சூடாக்கப்பட்ட தேன்கூட்டில் உள்ள மெழுகுகள், கட்டிட கலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமானவற்றை கலந்து பதப்படுத்தும் ரசாயனத்தை எகிப்து அரசர்கள் பயன்படுத்தியதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

First Published :

February 16, 2025 7:24 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

5000 ஆண்டுகளுக்கு பின்னரும் கெட்டுப் போகாத எகிப்து மம்மி உடல்கள்.. என்ன காரணம் தெரியுமா?

Read More

Previous Post

Post Office சேமிப்பு திட்டத்திலேயே இதான் பெஸ்ட்… வீட்ல இருந்தே ஈஸியா Investment பண்ணலாம்…

Next Post

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட வேலை மோசடி பாதிக்கப்பட்டவர்களைப் பெங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் சந்தித்தது – Malaysiakini

Next Post
மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட வேலை மோசடி பாதிக்கப்பட்டவர்களைப் பெங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் சந்தித்தது – Malaysiakini

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட வேலை மோசடி பாதிக்கப்பட்டவர்களைப் பெங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் சந்தித்தது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin