Last Updated:
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து இஸ்ரேல், ஹமாஸ், எகிப்து, கத்தார் மற்றும் ஜேரட் குஷ்னர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து இஸ்ரேலும், ஹமாஸும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இப்போர் தொடங்கி இன்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்தார்.
காசாவை பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதி பூங்காவாக மற்றும் செயல் திட்டத்தை இந்த அமைதி திட்டம் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்த நிலையில், ஹமாஸுக்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது. 72 மணிநேர கெடு முடிந்ததை அடுத்து, ஹமாஸும் அமைதி திட்டத்தை ஒப்புக் கொண்டது.
இந்த சூழலில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இருதரப்பு பிரதிநிதிகளோடு எகிப்திய, கத்தார் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளனர். இவர்களோடு டிரம்பின் மருமகனும், தனி ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் உள்ளிட்டோர் இணையவுள்ளனர்.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகதாகவும் காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
October 07, 2025 7:18 AM IST


