கடன் வழங்கும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்கினால் திவாலாகிவிடும் என பலரும் எச்சரித்த நிலையிலும், அதையெல்லாம் பொய்யாக்கி, சாதாரண மக்களுக்கு ட்ரக்குகள், டிராக்டர்கள் வாங்க கடன் வழங்கியும், அவர்கள் சேமிப்பதற்காக சீட்டு திட்டங்களை தொடங்கியும் நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகனானார் தியாகராஜன்.