தங்களது நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது உலக நாடுகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான், கூகுள் நிறுவனங்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு(ஏஐ), கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.2 பில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் வேளையில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை வழங்குவது நியாயமற்றது எனக் கூறி கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூயார்க், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் சிலர் 10 மணிநேரத்திற்கும் மேலாக கடந்த செவ்வாய் கிழமையன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தில் கூகுள் நிறுவனம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
