Last Updated:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு ஊழல் வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தின் அதிபராக நீண்ட காலம் இருந்த ஷேக் ஹசினாவுக்கு எதிராக கடந்தாண்டு அந்நாட்டில் இளைஞர் புரட்சி வெடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 1,400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது தொடர்பான வழக்கில், ஷேக் ஹசினாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசினாவை நாடு கடத்த இந்தியாவிடம் அந்நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், ரஜூக் டவுன் திட்டத்தில் நில ஒதுக்கீடு செய்ததில் ஷேக் ஹசினா ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
இதில் ஷேக் ஹசினா நாட்டை விட்டு தப்பி ஓடியவர் என குறிப்பிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிமன்றம் ஒவ்வொரு வழக்குக்கும் தலா 7 ஆண்டுகளை தனித்தனியே சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஷேக் ஹசினாவுக்கு மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
November 27, 2025 6:05 PM IST
ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 21 ஆண்டுகள் சிறை! – வங்கதேச நீதிமன்றம்


