Last Updated:
இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி ஊழல் வழக்கில் தலா 17 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர்; இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அரசு நிதியை கையாடல் செய்தது, ரகசிய தகவல்களை கசியவிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சவுதி அரேபிய மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான மற்றொரு ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு இம்ரான் கானுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.
முன்னதாக இம்ரான் கான் அடியாலா சிறையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை பாகிஸ்தான் அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டு சிறை.. பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!


