இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது அதிகார வரம்பிற்குள் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதியைப் பெறுவதற்கு பிரதேச சபை பின்பற்ற வேண்டிய தேசிய அரச சபையின் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், 2021-ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு கட்டுமானத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, விண்ணப்பதாரருக்கு சாதகமாக நடந்துகொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


