Last Updated:
Kanjamajhira village | ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், கஞ்சமஜிரா கிராமத்தில் காதல் திருமணம் செய்த இளம்ஜோடியை, கிராமத்தினர் ஏரில் பூட்டி, நிலத்தை உழ வைத்தனர். வீடியோ வைரலாக பரவிய நிலையில் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.
கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்த இளம்ஜோடியை, இப்படி ஏர் பூட்டி நிலத்தை உழ வைத்த கொடூரம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமஜிரா (Kanjamajhira) கிராமத்தில் ஊரார் எதிர்ப்பை மீறி இளம்ஜோடி, காதல் திருமணம் செய்து கொண்டது. சொந்த அத்தை மகனை இளம்பெண் காதலித்து கரம் பிடித்தார். ஆனால், உள்ளூர் கிராம வழக்கப்படி உறவுக்குள் திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.
I am writing to express profound concern over a deeply disturbing incident reported in Kanjamajhira village, Rayagada District, Odisha, wherein a young couple was subjected to brutal and humiliating punishment by a mob for marrying in contravention of local societal norms. 1/2 pic.twitter.com/KPDMfUst0z
— sᴀᴘᴀɴᴀ ᴋᴜᴍᴀʀ (@KumarSapan26498) July 11, 2025
இந்நிலையில், இளம்ஜோடிகளைப் பிடித்த கிராமத்தினர், மாட்டிற்குப் பதிலாக ஏரில் அவர்களைப் பூட்டி, நிலத்தை உழ வைத்தனர்.
மேலும் மாட்டை அடிப்பதைப்போன்று, இளம்ஜோடிகளை இரண்டு பேர் கம்பால் அடித்தும் கொடுமைப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாதி குமார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
Odisha (Orissa)
July 12, 2025 1:36 PM IST
ஊர்கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் : ஒடிசாவில் இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்!