நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள கீழ்கவ்வட்டி கிராமத்தில் இன்றைய இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் வாழ விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளையாட்டில் கவனம் செலுத்தும் பொருட்டு கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
AC ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த கால்பந்து போட்டியில் இறுதிப் போட்டியில் எடப்பள்ளி புட்பால் கிளப் அணியினரும் பரலட்டி புட்பால் கிளப் அணியினரும் விளையாடினர். ஊட்டி லயன்ஸ் கிளப் சார்பாக வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.
இந்த இறுதிப் போட்டிக்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவாகப் பிரியாணி வழங்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பரலட்டி அணியினர் இரண்டு புள்ளிகளையும், எடப்பள்ளி அணியினர் ஒரு புள்ளியும் எடுத்து, பரலட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
இதையும் படிங்க: Toda Embroidery: தோடர்களின் பாரம்பரியமான கை எம்பிராய்டரி… போலி தயாரிப்புகளால் பாதிப்படையும் வாழ்வாதாரம்..
இந்த கால்பந்து போட்டி குறித்து ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி கூறுகையில், “தற்போது கிராம அளவில் போட்டிகள் நடத்திவரும் நிலையில், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இங்கு நடைபெறும் கிரிக்கெட், ஃபுட்பால் போட்டிகள் நீலகிரி அளவில் பிரபலமானதாக உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் வரும் நாட்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவதற்கு கலந்துரையாடி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
