பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் போதுமான ஊட்டச்சத்தை அளிப்பதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சியில்
தாமதம் மற்றும் போதிய தாய் வழி பராமரிப்பு ஆகியவை தொடர் பிரச்சினைகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதாரம் 50% வளர்ச்சி அடைந்தாலும், உலகின்
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் ( malnourished children) மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்பது தான் உண்மை. இவர்களில் மூன்று வயதுக்குட்பட்ட
குழந்தைகளில் பாதி பேர் தங்கள் வயதிற்கு ஏற்ற எடையை கொண்டிருக்கவில்லை.
இதை உணர்ந்த மத்திய அரசு போஷன் அபியான் – அனைவருக்கும் ஊட்டச்சத்து என்ற திட்டத்தை செயல்படுத்தியது. போஷன் அபியான் ஊட்டச்சத்துக்கான முழுமையான அணுகுமுறை
தேசிய ஊட்டச்சத்து இயக்கம் என்று அழைக்கப்படும் போஷன் அபியான் என்பது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நமது பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மையான திட்டம் ஆகும்.
2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் 1000 நாட்களை அவர்கள் வளர்ச்சிக்கு உகந்த முக்கியமான நாட்கள்
என்பதை எடுத்துரைக்கிறது. ஊட்டச்சத்து புரட்சியின் முன்னணி படை இந்தியாவில் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் அங்கன்வாடி திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அங்கன்வாடி என்ற சொல் ஆங்கிலத்தில் courtyard shelter
என்று மொழிபெயர்க்கப்படுகிறது, அதாவது இந்த மையங்கள் ஒரு சமூக மையமாக இருப்பதற்கான அதன் ஆரம்ப நோக்கத்தை பிரதிபலிக்கிறது. கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் குறிப்பாக விளிம்பு நிலை சமூகங்களுக்கு ஊட்டச்சத்தை கொண்டு சேர்ப்பதில்
இந்த மையங்களின் பங்கு மிக முக்கியமானது. 2018 ஆம் ஆண்டில் போஷன் இயக்கத்தின் தொடக்கத்திற்கு பிறகு, இந்த இயக்கத்தை செயல்படுத்துவதில் அங்கன்வாடி அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.
இந்த முன்முயற்சியின் நோக்கம் கீழ்கண்டவற்றின் மூலம் ஒரு
குழந்தையின் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் கவனம் செலுத்தி ஊட்டச்சத்து குறைபாட்டை விரிவாக கையாள்வது ஆகும்.
அங்கன்வாடிகளின் பங்கு சேவைகளை வழங்குவதை தாண்டி சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது வரை விரிவடைந்திருக்கிறது.சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பராமரிப்பு நடைமுறைகள் பற்றிய அறிவைக் கொண்டு
சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு முக்கிய விஷயமாக மாறியது.
டிஜிட்டல் மாற்றம்: 2018க்கு பிறகு அங்கன்வாடி சேவைகளின் செயல் திறன் மற்றும் அவற்றை தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. போஷன் டிராக்கர் போன்ற டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தி, நிகல் நேர
கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை நோக்கமாகக் கொண்டு செய்யல்பட்டது. மேலும் தரவு அடிப்படையில் முடிவுகளை எடுக்க உதவியது.
அங்கன்வாடி மையங்களில் பணிபுரிபவர்கள் சிறந்த முறையில் செயல்படுவதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது தான் போஷன் டிராக்கர். இந்தியாவில் போஷன் டிராக்கர்
செயல்படுத்த தொடங்கப்பட்ட பின்னர், உலக சுகாதார அமைப்பின் தர நிலைகளை பயன்படுத்தி 75 லட்சம் குழந்தைகளை பரிசோதனை செய்ததில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு
(SAM) மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு (MAM) கொண்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை 12% வரை குறைந்தது தெரிய வந்துள்ளது.
பின்வரும் அம்சங்களுடன் இந்தியாவில் ஊட்டச்சத்து நிலைமையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வந்தது. இது பயனர்களின் வசதிகளுக்காக 12 மொழிகளில் செயல்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள்ம் பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், இளம்பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து தகவல்கள் உள்ளிட்ட பயனாளிகளின் விவரங்களை உள்ளிடவும், புதுப்பிக்கவும் அங்கன்வாடி பணியாளர்களை அனுமதிக்கிறது. தினசரி நடவடிக்கைகள், வருகை ,உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து தரவு, மற்றும்
மையத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை கண்காணிக்கிறது.
ஆதரவற்ற குழந்தைகளின் விவரங்களை சேர்க்கவும் நிர்வகிக்கவும் ஒரு பிரிவை இது உள்ளடக்கியுள்ளது. அங்கன்வாடி மையங்களின் நிலை மற்றும் இணக்கம் குறித்து மதிப்பீடு செய்ய மற்றும்
அறிக்கை தயாரிக்க சரிபார்ப்பு பட்டியல்களை உள்ளடக்கியுள்ளது.
அங்கன்வாடி மையத்தின் உள் கட்டமைப்பு தொடர்பான தரவுகளை பெறுகிறது. கிராம அளவிலான தொழில் முனைவோர்களிடமிருந்து பெற்ற பயிற்சிகள் குறித்து கருத்து தெரிவிக்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவுகிறது.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு செயலி குறித்த பல்வேறு பயிற்சிகளை அளிக்க உதவி செய்கிறது. அங்கன்வாடி பணியாளர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியை மதிப்பீடு செய்து
பின்னூட்டங்கள் வழங்க வழி வகை செய்கிறது. பயனாளிகளின் வளர்ச்சி, தடுப்பூசி மற்றும் பிற அத்தியாவசிய அளவுருக்களை
கண்காணிக்கிறது. முன்னேற்றம் இருந்த போதிலும், உள்கட்டமைப்பு வரம்புகள், ஆள் பற்றாக்குறை மற்றும்
சேவைகளின் தரத்தை உறுதி செய்வது போன்ற சவால்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. அங்கன்வாடி பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு சுகாதார சேவைகளுடன்
மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரிய
வைப்பது மற்றும் சமூத்தை ஒன்றிணைப்பது உள்ளிட்ட இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக புது புது உத்திகளை அரசாங்கம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
கல்வி ரீதியான அணுகுமுறை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் போஷன் சே பதாய் தக் என்று
முன்முயற்சியானது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரான ஸ்மிருதி ஜுபின் இரானியின் கீழ் போஷன் 2.0 திட்டத்தில் குழந்தை வளர்ச்சிக்கான ஒரு முழுமையான
அணுகு முறையை கொண்டுள்ளது. இந்த திட்டம் ஊட்டச்சத்து மற்றும் கல்வியை ஒருங்கிணைக்கிறது. ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு உறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த முயற்சி , செயல்பாடுகளை கண்காணிப்பிற்கான
தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தேசத்தின் ஆரோக்கியமான மற்றும் வளமான
எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்க இது முயற்சி செய்கிறது.தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொகுத்து
வெளியிட்டுள்ள ”போஷன் உத்சவ் புத்தகம் “ இந்த முயற்சியின் ஒரு முக்கிய படியாகும்.
பண்டைய ஊட்டச்சத்து பாரம்பரியங்களை புதுப்பிக்கவும், தலைமுறைகளுக்கு இடையிலான கற்றலை வளர்க்கவும் இந்தியாவின் வளமான உணவு பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து
பன்முகத்தன்மையை கொண்டாடவும் இந்த விரிவான ஆதாரம் முயல்கிறது. போஷன் உத்சவ் புத்தகத்தோடு சேர்த்து இந்த முன் முயற்சி இந்தியாவின் பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கிடையே ஒரு ஒத்துழைப்பை கொண்டு வந்துள்ளது. கார்ட்டூன் கதாபாத்திரங்களின் கூட்டணியையும் அறிமுகம் செய்துள்ளது. சாம்பு, சுப்பந்தி, சச்சா சவுத்ரி ,
எல்மோ மற்றும் சாம்கி போன்ற கதாபாத்திரங்கள் இணைந்து ஊட்டச்சத்துக் குறித்த முக்கிய செய்திகளை வேடிக்கையான மற்றும் குழந்தைகள் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ளக்கூடிய
முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இந்த புதுமையான அணுகுமுறையின் நோக்கம் ஊட்டச்சத்து கல்வி குறிப்பாக குழந்தைகளுக்கு சென்று சேரக்கூடிய வகையில்
இருக்க வேண்டும், இதனால் ஊட்டச்சத்து தொடர்பான நேர்மறையான நடத்தை மாற்றங்களை உருவாக்க முடியும் என்பது ஆகும். இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால் அங்கன்வாடிகள் அவற்றை செயல்படுத்துவதற்கான முக்கிய
மையங்களாக உருவெடுக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்து போராடுவதற்கும்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு முழுமையான சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் கூட்டு உறுதிப்பாட்டை இவை உறுதிப்படுத்துகின்றன. போஷன் சே பதாய் தக் திட்டம் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, அடிமட்டத்தில் இருந்து
மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்கும் இந்த ஊட்டச்சத்து புரட்சியில் அனைவரும் இணைந்து செயல்படலாம் வாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…