[ad_1]
பின்னர், மூன்று நாட்களில் அவர்களின் ஜாமினில் வெளியே வந்தனர். ஆனால், கேளிக்கை விடுதியில் பிரித்வி ஷா தான், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சப்னா புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருந்தபோதும், பிருத்வி ஷா மீது வழக்குப்பதிவு செய்யாமல் முதல்கட்டமாக விசாரணை நடத்த மேஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து சப்னா தரப்பில் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பெண்ணின் புகார் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய பிரித்வி ஷாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் பதில் அளிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.