Last Updated:
செஸ் வரலாற்றில் முதன் முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 5 இடத்தில் இரண்டு தமிழர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 11.3 புள்ளிகளை அதிகம் பெற்று குகேஷை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
June 27, 2025 7:54 PM IST


