கோலாலம்பூர், நவம்பர் 20-
அடுத்த ஆண்டு முதல், சுத்தமான கழிப்பறைகளையும், குறைந்தபட்ச சுகாதாரத் தரங்களையும் கொண்ட வணிகங்களுக்கு மட்டுமே ஊராட்சி மன்றங்கள் (PBT)இன் வர்த்தக உரிமம் வழங்கப்படும் என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.
இந்த நகர்வு, 2026ஆம் ஆண்டில் ஊராட்சி மன்றங்களுடன் தொடங்கி, தேசிய கழிப்பறைத் தரங்களை “BMW – சுத்தம், கவர்ச்சிகரமான, மணம்” என்ற நிலைக்கு உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இது மலேசிய வருகை ஆண்டு 2026 க்கு முக்கியத்துவம் சேர்க்கிறது.
இதனிடையே RM180 மில்லியன் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், 2035ஆம் ஆண்டுக்குள் ஆண்களைவிட அதிகமான பெண் கழிப்பறைகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் நீண்ட வரிசைகள் தவிர்க்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமின்றி, KPKT சிறந்த கழிப்பறை விருது (TOTYA) 2025 விழாவில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
அமைச்சர், உயர்ந்த சுகாதாரத்தை ஏற்றுக் கொள்வது, தேசியப் பிம்பத்திற்கும் பயனர் அனுபவத்திற்கும் ஒரு வெற்றி என்று வலியுறுத்தி, சுத்தமான வசதிகளை மலேசிய தரநிலையாக மாற்றுவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.




